கேம் சேஞ்சர் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் படுதோல்வி அடைந்துள்ளது. 450 கோடி பட்ஜெட்டுக்கு எடுக்கப்பட்ட இந்த படம் 200 கோடி கூட வசூல் செய்ய முடியவில்லை.
ஷங்கரின் கேரியரில் அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 6 நாட்களில் 8 கோடி வசூல் செய்த கேம் சேஞ்சர் உலகளவில் 190 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் HD குவாலிட்டி பிரிண்ட் வெளிவந்து ஷங்கருக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் லோக்கல் கேபிள் சேனலில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவில் பிரமோஷன், ஓவர் பில்டப், பாடல்களுக்கு மட்டும் 95 கோடி இப்படி பல சர்ச்சையான சம்பவங்களில் சிக்கியுள்ளார் ஷங்கர் மற்றும் தில் ராஜ்.
ஏற்கனவே வாரிசு படத்தில் விழுந்த அடியே ஆறாத சூழ்நிலையில் கேம் சேஞ்சர் தில்ராஜுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 75% விநியோத்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கேம் சேஞ்சர் படத்தை மாற்றி மத கஜ ராஜா படத்தை திரையிட்டு வருகின்றனர்.
ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஷங்கருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு இந்தியன் 3 மெருகேற்ற தயாராகி வருகிறார்.