விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.
இதே தேதியில் தனுஷின் மூன்றாவது இயக்கத்தில் வெளிவர இருக்கும் Neek படம் பிப்ரவரி 6 வெளியாக இருந்தது. ஆனால் தற்போது விடாமுயற்சிக்காக ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளிவந்திருந்தால் வணங்கான் படத்தை வெளியிட்டு இருக்க மாட்டோம்.
அஜித்தின் பலம் தெரியாமல் மோதக்கூடாது அதை தெளிவாக கூறியிருந்தார். அதேபோல் தற்போது தனுஷ் விலகி இருப்பது அஜித்தின் மேல் உள்ள பயம் என்று கூறுகிறது கோலிவுட்.
நேற்று வெளியான ட்ரெய்லரை பார்க்கும்போது மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித் இதற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. Breakdown படத்தின் கதைதான் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாகி விட்டது.
லேட்டா வந்தாலும் விடாமுயற்சி கண்டிப்பா சம்பவம் செய்யும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை ஏனென்றால் மகிழ்ச்சி திருமேனி மேலுள்ள நம்பிக்கைதான்.