சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கழுத்தை சுற்றிய பாம்பாக பிரச்சனைகள் இருந்தாலும்.. ஆறு மாசத்துல 3 படங்களுக்கு நாள் குறித்த தனுஷ்

தனுசுக்கு கடந்த வருடத்தில் பல சர்ச்சைகள் கழுத்தை சுற்றியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவாகரத்து, நயன்தாராவுடன் வந்த பிரச்சனை இப்படி அடுத்தடுத்து பிரச்சனைகள் கழுத்தை சுற்றிய பாம்பு போல் படம் எடுத்து நின்றது.

ஆனாலும் தளராத தனுஷ் இந்த வருடத்தில் மட்டும் 3 படங்களை வெளியிட உள்ளார். நடிப்பை தாண்டி இயக்கத்திலும் துல்லியமாக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனுஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் விடாமுயற்சியுடன் மோத இருந்தது. ஆனால், ஜனவரி 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார். எமோஷனல் கனெக்ட் உள்ள இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கிரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Sekhar Kammula இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள குபேரா படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. PAN India படமாக வெளிவர உள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜூலை 28 தேதி உலகம் முழுக்க வெளிவர உள்ளது. இப்படி இந்த வருடத்தில் 6 மாதத்தில் 3 படங்களை முரட்டு தைரியத்தில் தனுஷ் வெளியிடுவதை பார்த்து கோலிவுட் வட்டாரமே வாயடைத்து விட்டதாம்.

Trending News