சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரோகினியின் தில்லாலங்கடி வேலையை புரிந்து கொள்ளும் மனோஜ்.. முத்து போட்ட அஸ்திவாரத்தில் ஆடிப்போன கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மலேசியா தம்பதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ரோகிணி போட்ட ஆட்டத்தில் பலியாடாக அவரே சிக்கிக் கொண்டார். அதாவது வாயை திறந்தால் தானே ஏதாவது பேச வேண்டியது வரும், தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வோம் என்று புரிந்து கொண்டு உஷாராகிய ரோகினி பல் வலி டிராமாவை போட்டார்.

இதை நம்பிய விஜயா, ரோகிணி ஆஸ்பத்திரிக்கு போய் ட்ரீட்மென்ட் எடுக்க சொன்னார். ஆனால் சுருதி தனியாக போக வேண்டாம் நானும் வரேன் என்று சொல்லி ரோகினியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி பல்லை புடுங்கி விட்டார். திரும்பி வீட்டிற்கு வந்த ரோகினி பல் வலியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ரோகினிக்கு ஃபோன் வருவதால் ரோகிணி பக்கத்தில் இல்லாததால் மனோஜ் அந்த போனை எடுத்து விடுகிறார்.

அதில் ரோகிணியின் அம்மா தங்கி இருக்கும் வீட்டு ஓனர் பேசுகிறார். இந்த மாதத்திற்கான வாடகை ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்று கரராக பேசிய நிலையில் மனோஜ், அந்த ஓனர் நீ வாடகை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே ரோகிணி எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் என்னுடைய தோழி ஒருவருக்கு வேலை இல்லை.

அதனால் அவளால் வாடகை கொடுக்க முடியாது என்பதால் மூன்று மாதமாக நான் வாடகை கொடுத்து வருகிறேன் என்று சொல்லி சமாளிக்கிறார். இதனை கேட்ட மனோஜ் நீ ஏன் கொடுக்க வேண்டும், அப்படியே கொடுப்பதாக இருந்தாலும் ஏன் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. வரவர நீ எல்லா விஷயத்தையும் என்னிடம் இருந்து மறைக்கிறாய். உன்னை நம்ப முடியாத பல விஷயங்கள் உன்னிடம் ரகசியமாக இருக்கிறது.

இப்படித்தான் அந்த சிட்டியிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். அந்த வகையில் வட்டிக்கு வாங்கும் அளவிற்கு உனக்கு என்ன செலவு இருக்கிறது என்று எனக்கும் தெரியவில்லை. இதெல்லாம் நீ செய்தாலும் ஏன் என்னிடம் சொல்லாமல் மறைக்கும் அளவிற்கு என்ன ரகசியம் இருக்கிறது என்று ரோகினிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

உடனே ரோகிணி இதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காக எனக்கு வந்த போனே என்னுடைய அனுமதி இல்லாமல் நீ ஏன் எடுத்தாய் என்று சண்டை போட ஆரம்பித்து விடுகிறார். உடனே மனோஜ், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ எதையோ சொல்லி என்னை திசை திருப்புகிறாய். இன்னும் உன்னை பற்றி விஷயங்கள் என்னெல்லாம் மறைத்து வைத்திருக்கியோ அதையெல்லாம் இப்பொழுதே என்னிடம் சொல்லிவிடு.

இல்லையென்றால் தேவையில்லாமல் நமக்குள் பிரச்சினையாகி விடும் என்று ரோகினிடம் சண்டை போட்டு மொட்டை மாடிக்கு போய் விடுகிறார். அதே மாதிரி முத்துவும் அவருடைய நண்பர் துபாய்க்கு போவதால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீனா சண்டை போட்டு கோபமாக பேசி விடுகிறார். உடனே முத்து மொட்டை மாடியில் தூங்குவதற்கு போய்விடுகிறார்.

அத்துடன் ரவி மீட்டிங்கில் இருக்கும் பொழுது ஸ்ருதி போன் பண்ணிக் கொண்டே இருப்பதால் ரவி எடுக்காமல் போனை சைலன்ட் போட்டு விடுகிறார். இதனால் வீட்டுக்கு வந்த ரவியிடம் கோபமாக சுருதி சண்டை போடுகிறார். பிறகு ரவியும் மொட்டை மாடிக்கு தூங்க போயி மூன்று பேரும் சேர்ந்து மொட்டை மாடியில் புலம்பித் தவிக்கிறார்கள்.

எது எப்படியோ முத்து, அவ்வப்பொழுது ரோகிணிக்கு வைத்த ஆப்பு மனோஜ் மனசை கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க வைக்கிறது. இதனை அடுத்து ரவி ஹோட்டலில் பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக போட்டி வைக்கிறார்கள். இதில் முத்து மீனா மற்றும் ரோகினி மனோஜ் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஒரு சம்பவத்தால் மறுபடியும் மனோஜ் மற்றும் ரோகினி முட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News