Biggboss 8: பிக்பாஸ் 8 கிராண்ட் ஃபினாலே நாளை நடைபெற இருக்கிறது. அதிலும் இந்த வாரம் வீட்டுக்குள் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது.
அதில் ஜாக்லின் வெளியேறியது இப்போது வரை சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. விஜய் டிவி மீது அவருடைய ரசிகர்கள் சில குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க பி ஆர் டீம் தங்களுக்கு பிடித்தவர்களுக்கான ஓட்டு வேட்டையில் தீவிரமாக இருந்தனர். அதிலும் முத்துக்குமரன், சௌந்தர்யா ஆதரவாளர்களுக்குள் தான் போட்டா போட்டி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யாரு.?
இரு தரப்பு ரசிகர்கள் மாற்றி மாற்றி நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து பரபரப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்து தான் டைட்டிலை தட்டி தூக்கப் போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே இது எதிர்பார்த்ததுதான் என்றாலும் தற்போது ஓட்டு எண்ணிக்கையில் அவர்தான் முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
மேலும் சௌந்தர்யாவின் ரசிகர்கள் கூட மனசை தேத்திக்கலாம் என கமெண்ட்களை வைரல் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பார்க்கும்போது முத்து வின்னர் ஆகவும் சௌந்தர்யா ரன்னராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
எது எப்படியோ நாளை இந்த வெற்றி கொண்டாட்டத்தை காண்பதற்கு ஆடியன்ஸ் தயாராகி விட்டனர். இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் கிடுகிடுவென உயர்ந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.