Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அன்புவின் அம்மாவுக்கு உடல்நலம் சரியாகிவிட்டது.
இதை அடுத்து மீண்டும் அன்பு, மகேஷ், ஆனந்தி என முக்கோண காதல் கதையை ஆரம்பித்து விடுவார்கள் என்ற சலிப்பு எல்லோருக்குமே இருந்தது.
பரபரப்புக்கு தீனி போடும் விதமாக வார்டனின் ரகசியத்தை வெளிக்கொண்டுவரும் வேலையை ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர்.
வார்டன் தான் மகேஷின் அம்மா என்பது சீரியலை பார்க்கும் எல்லோருக்குமே தெரியும்.
ஆனந்தியால் ஏற்பட்ட குழப்பம்!
ஆனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை, தில்லைநாதன் மற்றும் வார்டன் இருவருக்கும் இடையே என்ன நடந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கிறது.
தற்போது இந்த மர்ம முடித்து தான் வெளிவர இருக்கிறது. அதுவும் மித்ரா இந்த விஷயத்தை செய்ய இருக்கிறாள்.
ஆனந்தி வார்டன் கையில் ஒரு கிளுகிளுப்பை வைத்து அழுது கொண்டிருக்கும் போது பார்த்து விடுகிறாள். இதை தன்னுடைய தோழிகளிடம் சொல்லுகிறாள்.
அந்த நேரத்தில் மித்ரா இந்த விஷயத்தை ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருக்கிறாள். வார்டனுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ரகசியம் இருக்கிறதா, இது போதுமே என்று சந்தோஷப்படுகிறாள்.
அதே நேரத்தில் அன்புவின் அம்மாவிடம் மருத்துவமனையில் நர்ஸ் இரவு முழுக்க ஆனந்தி அவரைப் பார்த்துக் கொண்டதை பற்றி சொல்கிறார்.
இந்த விஷயத்தால் அன்புவின் அம்மா மனது மாறுவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அன்புவின் அம்மா ஆனந்தியை ஏற்றுக் கொள்கிறாரா, வார்டன் பற்றிய உண்மை வெளியே வருகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.