Mohanlal: கேரள சினிமா உலகிற்கு கடந்த சில வருடங்கள் ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். சின்ன சின்ன படங்கள் கூட மூன்று இலக்கத்தில் கோடிகள் லாபம் பார்த்தது.
அப்படி உலக அளவில் வசூலில் இமாலய சாதனை படைத்த 10 மலையாள படங்களை பற்றி பார்க்கலாம்.
10 மலையாள படங்கள்
மஞ்சும்மல் பாய்ஸ்: இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்ப்பதற்கு காரணமாக அமைந்தது குணா படத்தில் அமைந்த கண்மணி அன்போடு பாடல் தான்.
இந்த பாடல் அமைந்த காட்சிகள் இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் வைரலானது. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்தார்கள்.
20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 242 கோடி வசூல் செய்தது.
2018: 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.
தென்னிந்தியாவை தாண்டி உலக அளவில் பெரிய வெற்றி பெற்றது. 26 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த படம் 176 கோடி வசூல் செய்தது.
ஆடுஜீவிதம்: உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு மக்கள் தங்களுடைய தரமான ஆதரவை கொடுத்தார்கள்.
82 கோடி முதலீட்டில் உருவான இந்த படம் 158 கோடி வசூலித்தது.
புலிமுருகன்: மோகன்லால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் புலி முருகன். இந்த படம் 25 கோடியில் தயாரிக்கப்பட்டு 158 கோடி வசூலித்தது.
பிரேமலு: மஞ்சும்மல் பாய்ஸ்க்கு இணையாக கடந்த ஆண்டு பெரிய வெற்றி பெற்ற படம் பிரேமலு. பட் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 136 கோடி வசூலித்தது.
லூசிஃபார்: கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தான் லூசிஃபார். இந்த படம் 30 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 127 கோடி வசூலித்தது.
ARM: டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி செட்டி நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன படம் தான் ARM. 30 கோடி செலவு உருவாக்கப்பட்ட இந்த படம் 106 கோடி வசூலித்தது.
மார்கோ: கருடன் படத்தில் வில்லனாக மிரட்டிய உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் மார்கோ. இந்த படம் 30 கோடியில் தயாராகி 102 கோடி வசூலித்திருக்கிறது.
குருவாயூர் அம்பல நடையில்: நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த வருடத்தில் ரிலீசான பீல் குட் மூவி தான் குருவாயூர் அம்பல நடையில். 15 கோடி செலவில் உருவான இந்த படம் 90 கோடி வசூலித்தது.