கடந்த 103 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.. இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எகிறி விட்டது என்று தான் கூற வேண்டும்.
கமல் இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்று கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுத்து வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் யார் இந்த டைட்டில் வின்னர் என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.
50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுக்களை பெற்று பிக் பாஸ் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் ஜெயிக்க உள்ளார். இரண்டாம் இடத்திற்கும் முதலிடத்திற்கும் அதிக இடைவேளை இருப்பதால் உறுதியாக இவர் தான் டைட்டில் வின்னர்.
2ம் இடத்திற்கு VJ விஷால் மற்றும் சௌந்தர்யாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் VJ விஷால் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாம்.
முதல் இடத்தைப் புடித்த முத்துக்குமரனுக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. Rayan மற்றும் ஜாக்குலின் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் தள்ளப்பட்டு உள்ளனர்.