Vidaamuyarchi: ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வணங்கான், கேம் சேஞ்சர், மதகஜராஜா என ஏகப்பட்ட படங்கள் வெளிவந்தது. அதை அடுத்து வீர தீர சூரன் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு வராமல் டிமிக்கி கொடுத்த விடாமுயற்சி பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்த அறிவிப்பை லைக்கா சமீபத்தில் ட்ரைலருடன் வெளியிட்டது.
அதன்படி பிப்ரவரி மாதத்தை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்கிறது விடாமுயற்சி. வரும் 6ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது.
அதை அடுத்து காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் வெளியாகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், கே எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பிள்ளையார் சுழி போட வரும் விடாமுயற்சி
ரொமான்டிக் காதல் படமான இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வெளியாகிறது.
பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உட்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த கோல்டன் ஸ்பேரோ பாடல் சோசியல் மீடியாவை கலக்கியது.
அதைத்தொடர்ந்து படமும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக பிப்ரவரி மாதத்தை மேற்கண்ட படங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதில் எந்த படம் வசூலில் மாஸ் காட்டும் என பார்ப்போம்.