ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பாண்டியனை பழிவாங்க பிளான் பண்ணிய ராஜியின் அண்ணன்.. குமரவேலு சொன்ன வார்த்தைக்கு மயங்கி போன அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், எதார்த்த கூட்டு குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கதை இருப்பதால் மக்களிடம் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் தற்போது திடீரென்று எதிர்பாராத திருப்பங்களுடன் சில விஷயங்கள் எல்லாம் மாறப்போகிறது.

அதாவது கோமதி, அவருடைய அண்ணனின் கௌரவத்தை காப்பாற்றவும் ராஜியின் வாழ்க்கையை சரி செய்யும் விதமாக கதிரிடம் வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ண சொன்னார். கதிரும் அம்மா பேச்சை கேட்டு ராஜியை கல்யாணம் பண்ணி விட்டு தற்போது ராஜி மனசை நோகடிக்காத வகையிலும், பொறுப்பான கணவராக இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை சரிவர செய்வதற்கு பாடுபட்டு வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாத கோமதியின் அண்ணன்கள், பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். இதில் சக்திவேல் ஒரு படி மேலே போய், தன்னுடைய மகனின் கல்யாணத்தையும் நல்லபடியாக நடத்த வேண்டும் அதே நேரத்தில் பாண்டியனையும் பழி வாங்குவதற்கு நமக்கு ஒரு துருப்புச் சீட்டும் வேண்டும் என்பதால் அரசியை கல்யாணம் பண்ண சொல்லி குமரவேலுவிடம் கூறிவிட்டார்.

அதிலிருந்து குமரவேலு, அரசியை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். கடைசியில் எதுவுமே சரிப்பட்டு வரவில்லை என்றதும் நேரடியாக களத்தில் இறங்கி விட்டார். அதாவது அரசி காலேஜுக்கு போவதற்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கே வந்த குமரவேலு, பஸ் வராது என்று சொல்லி நான் உன்னை டிராப் பண்ணுகிறேன் என்று கூப்பிடுகிறார்.

ஆனால் அரசி, அதெல்லாம் வேண்டாம் உன்னுடைய வேலையை பார்த்துட்டு போ என்று கோபமாக சொல்லிவிடுகிறார். உடனே குமரவேலு நம்மளுடைய இரண்டு குடும்பமும் வருஷ கணக்கில் பேசாமல் இருந்து இப்பொழுது வரை முட்டி மோதி கொண்டு வருகிறார்கள். இதை சரி செய்ய வேண்டும் என்றால் நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக் கொண்டு போனால் அவர்கள் இருவரும் சமரசம் ஆகி ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லி அரசி மனசை மாற்றப் பார்க்கிறார்.

ஆனால் அரசி, நீ இப்ப இங்க இருந்து போகலை என்றால் நான் எங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிடுவேன் என்று சொன்னதும் குமரவேலு எதுவும் பேசாமல் போய்விடுகிறார். ஆனால் அரசி பார்க்கும் பார்வையிலும், குமரவேலு பேசிய பேச்சிலும் மயங்கி விடுவார் போல தெரிகிறது. அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அரசி மனசை மாற்றி குமரவேலு நினைத்தபடி கல்யாணம் பண்ணி பாண்டியனை பழிவாங்கி விடுவார்.

இதற்கு பேசாமல் வயசு வித்தியாசம் என்று எதையும் பார்க்காமல் நல்லவன் என்கிற முறையில் பழனிவேலுவுக்கு அரசியை கல்யாணம் பண்ணி வைத்தால் குடும்பம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் கெட்டவன் கையில் சிக்கிக் கொண்டு அரசி வாழ்க்கை கேள்விக்குறியாக போய்விடும்.

Trending News