Gossip: நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே நம்பர் நடிகை சர்ச்சைகளின் ராணி தான். அதிலும் அடுத்தடுத்த காதல் தோல்வியால் இவர் மீடியாக்களுக்கு சரியான தீனியாக அமைந்தார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்த நடிகை தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்ததும் மாறிவிட்டார். நடிப்பதற்கு கண்டிஷன் போடுவதில் தொடங்கி அம்மணியின் ஆட்டம் அதிகமாகத்தான் இருந்தது.
ஆனாலும் அவருக்கான ரசிகர்கள் வட்டம் அதிகம். அதனாலயே அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து கமிட் செய்யும் தயாரிப்பாளர்களும் உண்டு.
இருப்பினும் சமீபகாலமாக இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஆணவத்தின் உச்சியில் நடிகை ஆடும் ஆட்டம் அவருக்கே வினையாக அமைந்துள்ளது.
கடுப்பில் நம்பர் நடிகை
ஏதோ நாட்டுக்கே மகாராணி ரேஞ்சுக்கு நடிகை கொடுக்கும் அலப்பறை எல்லாம் கொஞ்சநஞ்சம் கிடையாது. தங்கும் இடத்திலிருந்து பிசினஸ் வரை இவருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய உண்மை முகம் வெளிப்படும் நிலையில் கணவருக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லையாம். கொஞ்சம் அடக்கி வாசி என அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
இவ்வளவு நாள் தலையாட்டி பொம்மையாக இருந்த கணவர் இப்போது எதிர்த்து பேச ஆரம்பித்ததில் நடிகை டென்ஷன் ஆகிவிட்டாராம். இந்த வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் வாய மூடிட்டு பேசாம இருக்கணும் என டோஸ் விட்டு இருக்கிறார்.
ஆரம்பத்திலேயே கண்ட்ரோல் செய்யாமல் இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம். பாவம் தான் நடிகையின் கணவர் என கோடம்பாக்க வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.