விரக்தியில் இருந்த கௌதம் மேனனுக்கு விஷால் கொடுத்த பூஸ்ட்.. விஜய் கைவிட்டாலும் மதகஜராஜா கொடுத்த சிம்மாசனம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்கள் எதுவும் கடந்த பத்து வருடங்களாக தரமான ஹிட் ஆகாமல் அவருக்கு பெரும் ஏக்கத்தை கொடுத்து வருகிறது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவருவதாக இருந்த துருவ நட்சத்திரம் படமும் இழுத்தடித்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்துக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி கௌதமிற்கு எந்த படமும் ஹிட் ஆகல. அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே முழு நேரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் அவர் இயக்கத்தில் ஐந்துவருடங்களுக்கு முன் உருவான துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் பல பிரச்சினைகளை தாங்கி வருகிறார். ஏற்கனவே அவர் கொடுத்த பேட்டியில் இந்த படத்தை அனைவரும் கைவிட்டு விட்டார்கள் யாரும் உதவவில்லை என்று கூறி இருந்தார்.

சமீபத்தில் மதகஜராஜா படம் 12 வருடம் கழித்து வெளிவந்தாலும் ஹிட் அடித்துள்ளது அதை போல் தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படமும் அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறது நிச்சயம் ஹிட் ஆகும் என கௌதம் எதிர்பார்த்து வருகிறார்.

மதகஜராஜா பட வெற்றி விழாவில் விஷால் அடுத்து தான் கௌதம் மேனனுடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே கௌதம் விஜய்யை வைத்து எடுப்பதாக இருந்த “யோகன் அத்தியாயம் ஒன்று” படத்தை இப்பொழுது விஷாலை வைத்து எடுக்க இருக்கிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment