Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி என்னதான் நல்ல மாமியாராக இருந்தாலும் அவ்வப்போது பாண்டியனின் மனைவி என்பதை நிரூபித்து விடுகிறார். அதாவது தன் பிள்ளைகளும் மருமகளும் தன்னுடைய புருஷன் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.
அதனால் தான் ராஜியை போலீஸ் ஆக்க கூடாது என்று கதிரிடம் பாண்டியன் பிடிவாதமாக பேசியதற்கு பின்னாடியில் புருஷனுக்கு சப்போர்ட்டாக கோமதி இருக்கிறார். அதனால் கோமதி, ராஜிடம் கோபமாக பேசுகிறார். இதனைப் பார்த்த மீனா, மாமியாரிடம் எப்படி பேசி எந்த மாதிரி மடக்கினால் நம்மளுடைய காரியத்துக்கு சரிப்பட்டு வருவார் என்ற யுத்தியை தெரிந்து வைத்திருக்கிறார்.
அந்த வகையில் ராஜி மீது கோபமாக இருக்கும் கோமதி இடம் உங்க பிள்ளை உங்க பேச்சைக் கேட்காமல் பொண்டாட்டி பக்கம் நிற்பது உங்களுக்கு கோபமாக இருக்கிறதா? இல்லை என்றால் மாமாவுக்கு பிடிக்காததை செய்கிறார் என்பதில் கோபமாக இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு கோமதி இரண்டுக்கும் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார்.
உடனே மீனா, கதிர் இந்த மாதிரி இருப்பதற்கு காரணம் நீங்கள் தான். உங்களால் தான் கதிர் இப்படி பேசுகிறார் என்று சொல்கிறார். அதற்கு கோமதி நான் என்ன பண்ணினேன் ஏன் என்ன சொல்கிறாய் என்று கேட்ட பொழுது, நீங்க பிள்ளைகளை அப்படி வளர்த்து இருக்கீங்க. யார் மனசையும் கஷ்டப்படுத்தாமல் அவர்கள் சந்தோஷத்தை நிறைவேற்றும் விதமாக பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து இருக்கீங்க.
உங்க வளர்ப்பு தான் காரணம் கதிர் இந்த மாதிரி இருப்பதற்கு, நீங்களே சொல்லுங்க மாமாவுக்கு ஏதாவது ஒரு லட்சியம் இருக்கிறது என்றால் அதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் சப்போர்ட் பண்ணுவீங்க தானே. அதே மாதிரி தான் கதிரும் ராஜிக்காக சப்போர்ட் பண்ணுகிறார். இதை நினைத்து நீங்கள் சந்தோஷம்தான் பட வேண்டும் என்று கோமதியை மடக்கி பேசும் அளவிற்கு மீனா தெள்ளத்தெளிவாக விவரங்களை சொல்லி கோமதிக்கு புரிய வைத்து விட்டார்.
உடனே கோமதியும், கதிர் மற்றும் ராஜி மீது எந்த தவறும் இல்லை என்று பாண்டியனிடம் பிள்ளைகளுக்கு சப்போர்ட்டாக பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் இதற்கிடையில் சரவணன் மட்டும் நம் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் அப்பா அம்மா என்ன சொன்னாலும் தலையாட்டி வருகிறார் என்ற ஆதங்கம் தங்கமயிலுக்கு இருக்கிறது. அந்த வகையில் தங்கமயிலின் ஆதங்கத்தை மீனா மற்றும் ராஜி புரிந்து கொண்டார்கள்.
இதனை அடுத்து வருகிற பொங்கல் தங்கமயிலுக்கு தல பொங்கல் என்பதால் தங்கமயில் குடும்பத்திலிருந்து சீர்வரிசை செய்வதற்கு தயாராகி விட்டார்கள். இந்த விஷயத்தை பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களிடம் வந்து சொல்கிறார். அப்பொழுது தங்கமயில் இதெல்லாம் சம்பிரதாயம், அதனால் அப்பா அம்மா செய்யறது செய்யட்டும் என்று பாண்டியனிடம் சொல்கிறார்.
இதைக் கேட்டதும் மீனா முகம் அப்படியே வாடி போய்விட்டது எதுவும் பேசாமல் ரூமுக்குள் போய்விடுகிறார். உடனே செந்தில் மீனாவிடம் சென்று ஏன் உன் முகம் வாடிப் போய்விட்டது, என்னாச்சு என்று கேட்கிறார். இதற்கு மீனா என்னுடைய அப்பா அம்மாவும் பேசி சமாதானம் ஆகிவிட்டால் எனக்கும் இந்த முறை தல பொங்கல். அவர்களும் சீர்வரிசை கொண்டு வருவாங்க என்று சொல்லி ஃபில் பண்ணுகிறார்.
உடனே செந்தில், மீனாவை சமாதானப்படுத்தும் விதமாக உங்க அப்பா அம்மா கூடிய விரைவில் உன்னிடம் வந்து பேசி சமரசம் ஆகி விடுவார்கள். அதற்குத்தான் நான் அரசாங்க உத்தியோகத்திற்கு பரிட்சை எழுதி இருக்கேன். நிச்சயம் அதில் வெற்றி பெற்று விடுவேன் அதன் பிறகு உங்க குடும்பத்தில் இருப்பவர்கள் என்னை மருமகனாக ஏற்றுக் கொள்வார்கள். பிறகு எல்லாத்துக்கும் சீர்வரிசை கொண்டு வந்து உன்னை கொண்டாடுவார்கள் என்று ஆறுதலாக பேசுகிறார். அடுத்ததாக இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பொங்கல் நிகழ்ச்சி கலை கட்டப் போகிறது.