திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

விடாமுயற்சியால் 2 படங்களை ஒத்தி வைத்த உதயநிதி.. தனுஷ் உடன் மோத போகும் மினி தனுஷ்

விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக உள்ளது இதனால் பிப்ரவரி 14 காதலர் தினத்தை குறிவைத்து ரிலீஸ் ஆக காத்திருந்த படங்கள் எல்லாம் பின்வாங்கியது. விடாமுயற்சி படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகம் செய்கிறது.

இதற்கிடையில் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் காதலர் தினத்திற்கு வருவதாக இருந்தது. தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி பார்த்துள்ளார். மிகவும் சிறப்பாக இருக்கிறது, நிச்சயமாக இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

எப்படி பார்த்தாலும் 20 கோடிகளுக்கு மேல் இந்தப் படம் வசூல் செய்யும் என உத்தரவாதமும் கொடுத்துள்ளார். இதனால் பிப்ரவரி 14 இதை ரிலீஸ் செய்ய வேண்டாம். விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் கிடைப்பது சிரமம் என தனுஷிற்கு அறிவுரை கொடுத்துள்ளார்.

தனுஷின் இந்த படம் 15 நாட்கள் கழித்து பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதைப்போல் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமான டிராகன் படமும் பிப்ரவரி 21 ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் வருங்கால தனுஷ் என கூறப்படும் மினி தனுஷ் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் தரப்பிலும் டிராகன் படம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தனுஷ் படம் ரிலீஸ் ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவில் தான் இந்த படத்தை அதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர்களாகிய கே எஸ் ரவிக்குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

Trending News