திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சந்தியா ராகம் சீரியலில் மாயா உடன் ஒன்று சேர்ந்த ரகுராமின் மகள்.. கதிரை காதலிக்க ஆரம்பித்த தனம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராம் குடும்பத்திற்காகவும், தனம் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் மாயா, கார்த்திகை தாலிக்கிட்ட விடாமல் தனத்திற்கு கதிரை தாலி கட்ட வைத்தார். ஆனால் இதற்குப் பின்னணியில் காரணம் என்ன என்று புரிந்து கொள்ளாத ரகுராம் மற்றும் தனம் இருவரும் சேர்ந்து மாயாவை வெறுக்க ஆரம்பித்தார்கள்.

இருந்தாலும் மாயா மீது எந்த தவறும் இருக்காது என புரிந்து கொண்ட ஜானகி, மாயாவிடம் அனைத்து உண்மைகளையும் கேட்டு தெரிந்து கொண்டார். அதனாலேயே மாயாவை யார் எதிர்த்தாலும், தான் கூடவே இருந்து சப்போர்ட் பண்ண வேண்டும் என்று ஜானகி முடிவு பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு போனார். அதன் பிறகும் கார்த்திக் தொடர்ந்து தனத்திற்கு டார்ச்சர் கொடுத்து வந்தார்.

அதை எல்லாம் யாருக்கும் தெரியாமல் மாயா முறியடித்து விட்டார். தற்பொழுது மாயாவை நிரந்தரமாக வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு பண்ணிய பார்வதி மற்றும் பத்மா இருவரும் சேர்ந்து கதிர் மற்றும் தனம் இருக்கிற போட்டோவை ஒன்றாக இணைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.

அந்த போட்டோவை பார்த்த தனம் ஆத்திரமடைந்து இதற்கெல்லாம் காரணம் மாயா தான் என்று முடிவு பண்ணி கன்னத்தில் அறைந்து விட்டு மாயாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இந்த ஒரு தருணத்துக்காக தான் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ப பார்வதி மற்றும் பத்மா இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டார்கள்.

ஆனால் கதிர் நடந்த உண்மை எல்லாத்தையும் ஜானகிடம் சொல்லிவிட்டார். ஜானகி இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று தனத்தை ரூம்குள் அழைத்துக்கொண்டு கார்த்திக் செய்த விஷயங்களையும் அவன் எவ்வளவு மோசமானவன் என்பதையும் ஒன்னு விடாமல் சொல்லிவிட்டார்.

அப்போது தனத்திற்கு மாயா செய்த தியாகங்கள் எல்லாம் புரிய ஆரம்பித்து விட்டது. உடனே என்னுடைய அக்காவை நானே பார்த்து பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்லி மாயா இருக்கும் கோவிலுக்கு சென்று மாயவிடம் மன்னிப்பு கேட்டு பாசத்தை கொட்டி மாயாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

இவர்கள் ஒற்றுமையாக வருவதை பார்த்து பார்வதி மற்றும் பத்மா என்ன திடீரென்று இப்படி நடந்து விட்டது. இதற்கு என்ன காரணம் இருக்கும் என்று குழம்பி போய் விட்டார்கள். இதையெல்லாம் தாண்டி ரூமுக்குள் வந்த தனம், கதிரின் போட்டோவை பார்த்து ஆசையுடன் தொட்டு பார்க்கிறார்.

அத்துடன் நடந்த சம்பவத்தையும் கதிர் செய்த தியாகத்தையும் எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார். அந்த வகையில் இனி கதிர் மற்றும் தனத்தை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதற்கு ஏற்ப தனம் மனசில் கதிர் குடி புகுந்து விட்டார். மேலும் இவர்களுடைய லவ் ட்ராக் ஓகே ஆன நிலையில் சீனு மற்றும் மாயாவும் கூடிய விரைவில் சேர வேண்டும். ஆனால் சீனு என்ன ஆனார், எங்கே போனார் என்று தெரியாத அளவிற்கு அவருடைய ட்ராக் மர்மமாக இருக்கிறது.

Trending News