ரிலீஸ் எப்பொழுது என ஒரு முடிவே கிடைக்காமல் போய்க் கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி திடீரென வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சி கொள்ளாக்கியது. அடுத்த மாதம் பிப்ரவரி ஆறாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ் தேதி அறிவிப்பதற்கு முன்பல பஞ்சாயத்துக்கள் நடைபெற்று உள்ளது. இது எங்கள் கதை என்று Paramount Pictures போட்ட Caseக்கு ஒரு செட்டில்மெண்ட் அவசரமாக நடந்துள்ளது. சன் டிவியும், நெட்ப்ளிக்ஸ்க்கும், லைகாவிற்கு பெரிய நெருக்கடி ஒன்றை கொடுத்துள்ளது.
இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் பேசிய பணம் தர மாட்டோம் என நெட்ப்ளிக்ஸ் அதிரடி முடிவை ஒன்றே கூறியிருக்கிறது. அதுவும் போக சன் டிவி இந்த படத்தை தங்களுடைய சேனலில் ஒளிபரப்ப நாளும் குறித்துள்ளது. இதுதான் இந்த அவசர அறிவிப்புக்கு காரணம்.
சுமார் 130 கோடிகள் கொடுத்து நெட்ப்ளிக்ஸ் இந்த படத்தை வாங்கியுள்ளது. மார்ச் மாதம் தங்களது ஓடிடி தளத்தில் ஒளிபரப்பவும் நாள் குறித்துள்ளது அந்த நிறுவனம். அதனால் நீங்கள் இன்னும் நாட்களை கடத்தினால் வியாபாரம் இதோடு முடிந்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
நெட்ப்ளிக்ஸ் போல் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தங்களது சேனலில் ஒளிபரப்பவும் நாள் குறித்து விட்டதாம். ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்ஸ் தனது 33 வது வருடத்தில் கால் பதிக்கிறது. அன்று விடாமுயற்சி படத்தை டிவியில் ஒளிபரப்புகிறது.