திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

யார் இந்த ராகுல்.? விஜய்யின் கள அரசியல் பயணம் தொடங்க காரணம் இதுதான்

Vijay-Parandur: பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் இன்று கிராம மக்களை சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேலாக அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு தோள் கொடுக்கும் வகையில் இன்று பரந்தூர் வந்த விஜய் ஆளும் கட்சிக்கு எதிராக தன் கருத்துக்களை முன் வைத்தார். அப்போது அவர் ராகுல் என்ற சிறுவனின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

அந்தப் பையன் பேசிய வீடியோ என்னை ஏதோ செய்து விட்டது. அதனால் தான் உங்களை காண வந்திருக்கிறேன். விவசாயிகளின் ஆசிர்வாதத்தோடு என்னுடைய அரசியல் கள பயணத்தை தொடங்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

அதற்கு இதுதான் சரியான இடம். உங்களின் ஆதரவோடு என்னுடைய அரசியல் களப்பயணம் தொடங்கி இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

விஜய்யின் கள அரசியல் பயணம் தொடங்க காரணம்

விஜயை இதுவரை சோசியல் மீடியாவில் பனையூர் பண்ணையார் வொர்க் ப்ரம் ஹோம் பார்க்கிறார் என்றெல்லாம் கிண்டல் அடித்து வந்தனர்.

அவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் இன்று அவர் மக்களை சந்தித்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இதற்கு காரணமான அந்த சிறுவன் ராகுல் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கிறது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து அந்த சிறுவன் ஒரு வீடியோவில் பேசி இருந்தான். அப்போது எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். நாங்கள் என்ன மேலே பறக்கவா போகிறோம்.

விளைநிலம் பள்ளிக்கூடம் இதுதான் வேண்டும். எங்கள் ஊர் தான் முக்கியம் என தெள்ளத் தெளிவாக சிறுவன் பேசி இருந்தான். அந்த வீடியோ பலரையும் திருப்பி பார்க்க வைத்தது.

அதுதான் விஜய் இன்று மக்களை சந்திக்கவும் ஒரு காரணமாக உள்ளது. தற்போது அந்த சிறுவனும் விஜய்யின் பேச்சை காண வந்துள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

Trending News