பாட்டில் ராதா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கியமான விஐபிகள் கலந்து கொண்டனர் .இந்த படத்தை புதுமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் நடிகர் குரு சோமசுந்தரம் முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார்.
குடியினால் ஏற்படும் தீங்குகளையும், அசம்பாவிதங்களையும் இந்த படத்தின் கதை கருவாக அமைத்துள்ளார் இயக்குனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், லிங்குசாமி, பா. ரஞ்சித், மிஸ்கின், அமீர் போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த படத்தை தயாரித்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர்களுடன் மிஸ்கினும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை பெண் பத்திரிகையாளர் ஒருவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மிஸ்கினை மேடையில் பேச அழைத்தார்.
எப்பொழுதுமே மிஸ்கின் மேடை நாகரிகம் இல்லாமல் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பவர். இந்த முறை எல்லை மீறி இது ஒரு பொது மேடை, இங்கே இப்படித்தான் பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் இல்லாமல் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தை பேசி அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் பெண்கள், மூத்த மதிக்கத்தக்க குடிமக்கள், முக்கியமான விஐபிகள் என அனைவரும் இருந்தார்கள் இதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எல்லை மீறி அசிங்கமான அருவருப்பான வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்து கொண்டார் மிஸ்கின்.
சினிமா உலகின் மதிக்கத்தக்க இயக்குனர்களாகிய அமீர், வெற்றிமாறன், லிங்குசாமி போன்றவர்கள் கூட இது தப்பு என்று அவருக்கு எடுத்துரைக்கவில்லை. மாறாக அதை ஊக்கப்படுத்தும் விதமாக குலுங்கி குலுங்கி சிரித்தனர். எல்லாத்துக்கும் மேல பா ரஞ்சித் இந்த பேச்சை அளவு கடந்து ரசித்து அனைவரையும் எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.