செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

எதிர்நீச்சல் 2 சொதப்பியதால் சன் டிவி எடுத்த அதிரடி முடிவு.. டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைக்க போட்ட பிளான்

Sun Tv Serial: சில சேனல்கள் போட்டி போட்டு புதுப்புது சீரியல்களை இறக்கினாலும் சன் டிவி சீரியலுக்கு ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் பல வருஷமாக முதலிடத்தில் இருப்பது சன் டிவி சீரியல் தான். ஆனாலும் தற்போது போட்டிகளும் சேனல்களும் அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் சன் டிவி புது யுத்தியை ஃபாலோ பண்ணி வருகிறார்கள்.

அதாவது ஏதாவது ஒரு சீரியல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றால் அந்த சீரியலுக்கு அதிக மெனக்கெடு எடுக்க மாட்டார்கள். அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவிட்டாலும் அந்த சீரியல்களால் நஷ்டமும் ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்வார்கள். ஆனால் சில சீரியல்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து பணத்தை வாரி இறைத்து விட்டு பின்பு அந்த சீரியல் சொதப்பி விட்டால் பெரிய நஷ்டம் ஆகிவிடும்.

அதன்படி தான் தற்போது புதிதாக ஆரம்பித்த எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் மீது பெருத்த நம்பிக்கை வைத்து பணத்தை வாரி இறைத்து ஆர்டிஸ்ட்களுக்கு அதிகபடியாக சம்பளத்தையும் கொடுத்து சன் டிவி சேனலில் அதிக புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து விடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விமர்சனமும் சுமாராகத்தான் அந்த சீரியலுக்கு கிடைத்து வருகிறது, டிஆர்பி ரேட்டிங்கிலும் 7 மற்றும் 8வது இடத்தில் தான் இருக்கிறது. இதனால் சன் டிவி சேனல் எடுத்த அதிரடி முடிவு என்னவென்றால் இனி எதிர்நீச்சல் சீரியல் அவ்வளவுதான் இதை நம்பி பெருசாக இறங்க வேண்டாம் என்று முடிவெடுத்து அடுத்தடுத்து புத்தம் புது சீரியல்களை கொண்டுவர துவங்கி விட்டார்கள்.

அந்த வகையில் ஆடுகளம், சொக்கத்தங்கம் என இரண்டு சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த லிஸ்டில் தற்போது பூங்கொடி என்ற சீரியலும் வரப்போகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் இல்லை என்று குடும்பத்தில் ஒரு கோடு போட்டு அதன்படி பெண் பிள்ளையை அடக்கி ஆளும் ஒரு தகப்பனின் நம்பிக்கையே பெற்று அன்பால் அவருடைய மனதை மாற்றி பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்.

ஒரு பெண் நினைத்தால் இந்த உலகத்தையே ஆள முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என்று சபதம் போட்டு பூங்கொடி களத்தில் இறங்க தயாராகி விட்டார். இந்த சீரியலும் கிட்டத்தட்ட எதிர்நீச்சல் சீரியல் மாதிரிதான். அதனால் இந்த சீரியலை பிரேம் டைமில் ஒளிபரப்பு செய்து விட்டால் இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றுவிடலாம் என்று புதுசாக பிளான் போட்டு விட்டார்கள். இதனால் கூடிய விரைவில் அடுத்தடுத்த புது சீரியல்கள் களமிறங்க போகிறது.

Trending News