Vijay Tv Serial: விஜய் டிவி சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சன் டிவி கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. அதிலும் தற்போது வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இதனால் அதிரடியாக விஜய் டிவி சேனல் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதாவது மார்க்கெட்டில் ஒரு பொருள் வியாபாரம் ஆகவில்லை என்றால் அதை விற்பதற்கு ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று சொல்வதும், அந்தப் பொருள்களின் விலையை கம்மி பண்ணி அதற்கு ஏதாவது ஒரு ஆஃபர் கொடுத்து மக்களின் ஆசைகளை தூண்டிவிட்டு அந்த பொருளை வியாபாரம் செய்து விடுவார்கள்.
இந்த ட்ரிக்ஸை தான் தற்போது விஜய் டிவி சேனலும் ஃபாலோ பண்ண போகிறது. அதாவது தற்போது ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவி சீரியலுக்கு சில நெகட்டிவ் விமர்சனங்களும் எதிர்மறையான கருத்துக்களும் வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்றிருக்கிறது.
இதனை சரி செய்யும் விதமாக விஜய் டிவி கொடுத்த ஆஃபர் என்னவென்றால் தினமும் மாலை 6:00 மணி முதல் 10:30 மணி வரை ஒளிபரப்பாகும் விஜய் மெகா தொடர்களை பார்த்துட்டு வருபவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை கொடுப்பவர்களை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்ட நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து வந்தால் அவர்களில் வெற்றி பெற்ற பத்து நபருக்கு பரிசு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
இந்த ட்ரிக்ஸ் 90ஸ் காலத்திலேயே பார்த்தாச்சு, அதை இப்பொழுது கொண்டு வரும் விதமாக விஜய் டிவி இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ண போகிறார்கள். ஆனால் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் இந்த விளம்பரத்தை கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு கீழே சிறியதாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற வசனத்தையும் போட்டு விட்டார்கள்.
அப்படி என்றால் இதெல்லாம் கண் துடைப்பாகத்தான் தெரிகிறது. ஆனாலும் இந்த ஆஃபர் கொடுத்த பிறகு வருகிற டிஆர்பி ரேட்டிங்கில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.