செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சந்தியா ராகம் சீரியலில் உயிரோடு வந்து நிற்கும் கார்த்திக்.. புவனேஸ்வரி செய்த சதியில் சிக்கிய கதிர், குழப்பத்தில் மாயா

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியல், கார்த்திக் மோசமானவன் என்ற விஷயம் தற்போது ஜானகி மூலம் தனத்திற்கு தெரிய வந்துவிட்டது. அத்துடன் மாயா தன்னோட வாழ்க்கையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக அவருடைய வாழ்க்கையை தியாகம் செய்து பழி ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று புரிந்து கொண்ட தனம், மாயாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு அக்கா செண்டிமெண்ட்டை கொட்டி விட்டார்.

இனி தனம் கதிருடன் சேர்ந்து வாழ்வதற்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்த்து நிலையில் புதுசாக ஒரு திருப்புமுனை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கார்த்திக் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி புகார் கொடுத்திருந்தார். அதன்படி கார்த்திகை கண்டுபிடிப்பதற்காக புதுசாக வந்த போலீஸ் புவனேஸ்வரி வீட்டுக்கு பின்னாடி இருக்கும் இடத்தை தோண்டி பார்ப்பதற்கு பஞ்சாயத்தில் பர்மிஷன் வாங்கி விட்டார்.

அப்படி அந்த இடத்தை தோண்டி பார்க்கும் பொழுது அதில் கார்த்திக்கின் உடம்பு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் அவர் இறந்து போன நிலையிலேயே அவர் பாக்கெட்டில் இருந்து கதிரின் விவரங்களையும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது போலீசுக்கு கதிர் தான் கார்த்திகை கொலை பண்ணி புதைத்து இருக்கிறார் என்று முடிவு பண்ணி கதிரை அரெஸ்ட் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இதற்கு இடையில் இந்த விஷயத்தை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த மாயா, வீட்டிற்கு சென்று ஜானகிடம் சொல்கிறார். ஜானகி நான்தான் கதிரை கொன்று விட்டேன் என்று சொல்லி குற்ற உணர்ச்சியில் பீல் பண்ணி அழுகிறார். அத்துடன் நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எல்லா உண்மையும் சொல்லி விடுகிறேன் என்று மாயாவிடம் ஜானகி சொல்கிறார்.

அதற்கு மாயா, பொறுமையாக இருங்கள் நீங்க போய் சொல்லிவிட்டால் எல்லாத்துக்கும் எல்லாம் உண்மையும் தெரிந்து விடும். அது மட்டுமில்லாமல் கதிரை மாட்டி விடுவதற்காக யாரோ பிளான் பண்ணி சிக்க வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இதற்கு பின்னாடி ஏதோ ஒரு மர்மமான விஷயம் இருக்கிறது என்று சொல்லி அந்த விஷயத்தை நான் கண்டுபிடிக்கிறேன் என்று ஜானகிடம் சொல்கிறார். ஆனால் இது எப்படி சாத்தியம் என்று தெரியாத நிலையில் மாயா ரொம்பவே குழப்பத்தில் இருக்கிறார்.

இதனை அடுத்து திடீர் திருப்பமாக இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது லிங்கம், புவனேஸ்வரி வீட்டிற்கு சென்று உங்க பையன் கார்த்திக்கை கொலை பண்ணவங்களை சும்மா விடாதிங்க என்று சொல்கிறார். அப்பொழுது புவனேஸ்வரி, லிங்கம் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகிறார். உடனே புவனேஸ்வரி, கார்த்திக் என்று கூப்பிட்ட நிலையில் ரூம்க்குள் இருந்து கார்த்திக் வருகிறார். இது என்னடா செத்துப்போன கார்த்திக் மறுபடியும் உயிரோடு வந்து நிற்பது போல் புது திருப்பமாக கதை அமைந்திருக்கிறது.

அந்த வகையில் ஜானகி மற்றும் மாயா சேர்ந்து கார்த்திகை புதைக்கும் பொழுது புவனேஸ்வரி கார்த்திகை காப்பாற்றி இருப்பார். ஆனாலும் ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கதிர் மீது பழி போட்டு பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக புவனேஸ்வரி சதி செய்திருக்கிறார். இப்படி புவனேஸ்வரி செய்த சதியில் கதிர் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். இதையெல்லாம் சரி செய்யும் விதமாக எல்லா உண்மையும் கண்டுபிடித்து மாயா, கதிரை வெளிக்கொண்டுவந்து தனத்துடன் சேர்த்து வைப்பார்.

Trending News