புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பாண்டியன் பெயரைக் கெடுக்க அரசியின் தோழிகள் சொன்ன விஷயம்.. போற இடத்தில் எல்லாம் ஜொள்ளு விடும் குமரவேலு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கூட்டு குடும்ப கதையாகவும் சந்தோஷங்களையும் கஷ்டங்களையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற வகையிலையும் இந்த நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன், என்னதான் காரராக இருந்தாலும் பிள்ளைகளை தங்கமாக வளர்த்து வைத்திருக்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி வீட்டிற்கு வந்த மருமகள்களும் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்கள். இப்படி சந்தோஷமாக இருக்கும் இந்த குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தும் விதமாக பாண்டியனின் மச்சான் சக்திவேல் அவருடைய பையன் மூலம் சதி செய்ய ப்ளான் போட்டு விட்டார். அதன்படி பாண்டியனின் மகள் அரசியை எப்படியாவது மடக்கி கல்யாணம் பண்ணி விட்டால் ஒட்டுமொத்த குடும்பமும் நம் காலடியில் வந்து விழுந்து விடுவார்கள் என்று சக்திவேல், குமரவேலுவிடம் சொல்லிவிட்டார்.

உடனே குமரவேலுவும், இந்த பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்றால் அரசி நம் வீட்டிற்கு வர வேண்டும். என்னுடைய மனைவியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அரசி பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அரசி காலேஜுக்கு போவதற்கு பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த குமரவேலு பஸ் வராது நான் வேண்டுமென்றால் உன்னை காலேஜ்ல டிராப் பண்ணுகிறேன் என்று கூப்பிடுகிறார்.

ஆனால் அரசி கோபமாக திட்டியதும் குமரவேலு பல வருஷங்களாக நம் குடும்பம் சண்டை போட்டுக்கொண்டு மோதுகிறார்கள். அதிலும் கதிர் ராஜ்ஜிய கல்யாணம் பண்ணியதால் ஊர்காரங்க முன்னாடி நாங்க அசிங்கப்பட்டதால் தான் நானும் உன்னுடைய குடும்பத்தின் மீது கோபப்பட்டு சில வார்த்தைகளை பேசி விட்டேன். அதெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக் கொண்டால் இரண்டு குடும்பமும் சமாதானம் ஆகி விடுவார்கள் என்று ஆசை வார்த்தைகளை காட்டி அரசி மனசை மாற்ற பார்க்கிறார்.

ஆனால் அரசி இந்த மாதிரி பேச்சு எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே, ஒழுங்கு மரியாதையா இந்த இடத்தை விட்டு போறியா இல்லையென்றால் எங்க அப்பாவுக்கு போன் பண்ணவா என்று பிளாக்மெயில் பண்ணி குமரவேலுவை அனுப்பி விட்டார். ஆனாலும் அரசி பக்கத்தில் இருந்த தோழிகள், பார்க்க நல்ல பையனாக இருக்கிறான் முறைபையன் வேற பேசாமல் அவன் சொன்னபடி நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டால் என்ன என்று அரசி மனசை குழப்பி விடுகிறார்கள்.

ஆனால் குமரவேலு அரசியை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதே பாண்டியன் பெயரை கெடுத்து நிம்மதியை கெடுக்க வேண்டும் என்ற நினைப்பில் தான். ஆனால் இது தெரியாத அரசி, தோழி சொன்னதும் குமரவேலுவை திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கிறார். போதாதருக்கு அரசி இருக்கும் இடத்திற்கெல்லாம் குமரவேலு சென்று ஜொள்ளு விடுகிறார்.

அந்த வகையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பாண்டியன் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அரசி அதை போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது குமரவேலு வாசலில் நின்று பார்த்து அரசியை வச்ச கண்ணு வாங்காமல் ரூட் விடுகிறார். ஆனால் குமரவேலு பார்க்கிறார் என்று தெரிந்தும் அரசி இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் மறைத்திருப்பதே மிகப்பெரிய ஆபத்தாக முடிய போகிறது.

இதற்கிடையில் தல பொங்கல் என்பதால் தங்கமயில் அப்பா அம்மா வீட்டிற்கு வந்து சீர்வரிசை செய்து ஆசீர்வாதம் பண்ணுகிறார்கள். அப்பொழுது தங்கமயிலின் அம்மா சும்மா இருக்காமல் மீனா மற்றும் ராஜியை சீண்டும் விதமாக வேறு எந்த சம்மதியும் சீர்வரிசை வைக்க வரமாட்டார்கள் அதான் நாங்கள் வைக்க வந்தோம் என்று பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். இதை கேட்டதும் மீனா முகம் வாடி போய்விட்டது, ஆனால் செந்தில் நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி மீனாவின் கையைப் பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்.

Trending News