புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முத்து விரித்த வலையில் தானாக சிக்கிக் கொண்ட ரோகினி.. பிரவுன் மணியை சந்திக்கப் போகும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை. அதே நேரத்தில் ரோகிணி அப்பா மலேசியாவிலும் இல்லை என்ற உண்மை முத்து மற்றும் மீனாவுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் இதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும் என்று இருவரும் சேர்ந்து CID வேலையை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து நம் ரகசியத்தை கண்டுபிடித்து விடக்கூடாது என்று யோசித்த ரோகிணி, மலேசியா கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு பண்ணி விட்டார். அதாவது இதுவரை ரோகிணி அப்பாவை யாரும் பார்த்ததில்லை, அவரும் ஜெயிலில் இருக்கிறார் அதனால் நாம் மலேசியாவிற்கு சென்று ரோகிணியின் அப்பாவை சந்தித்து பேசி நம்மால் முடிந்த உதவியை செய்து வெளியே கூட்டிட்டு வரலாம் என்று முத்து பிளான் போட்டு விட்டார்.

முத்து போட்ட பிளான்-க்கு விஜயாவும் சம்மதம் கொடுத்த நிலையில் ரோகிணி இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணினார். அந்த வகையில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணியே வரவழைத்து மலேசியாவில் இருக்கும் அப்பா ஜெயிலிலேயே இறந்துட்டாங்க என்பது போல் ஒரு ட்ராமாவை போட சொல்லிவிட்டார்.

அதன்படி பிரவுன் மணி, முத்துவின் வீட்டிற்கு வந்து அனைவரும் இருக்கும் பொழுது ரோகினியின் அப்பாவை ஜெயிலில் வைத்து விரோதிகள் கொன்று விட்டார்கள் என்று பொய் சொல்லி விடுகிறார். இதை கேட்டதும் ரோகினி மயக்கம் போட்டு கீழே விழுந்து அழுகாட்சி டிராமாவை போட்டு விட்டார். ரோகிணியின் ட்ராமாவை நம்பி அண்ணாமலை மலேசியாவுக்கு போட்ட டிக்கெட்டை கேன்சல் பண்ணிரு யாரும் அங்கே போக வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

ஆனால் இதன் பிறகுதான் முத்துவுக்கு உண்மையான சந்தேகமே வருகிறது. அதாவது ரோகிணியின் அப்பா இறந்து விட்டதாக சொல்வது பொய். வேறு ஏதோ பெரிய உண்மையை மறைக்க அப்பாவே இறந்ததாக ஒரு பொய் சொல்லி மொத்த குடும்பத்தையும் நம்ப வைத்து விட்டார். இதற்கு பின்னணியில் ரோகினி உண்மையான ரகசியம் மறைந்து இருக்கிறது என்று முத்து, மீனாவிடம் சொல்கிறார். அதன்படி முத்து போட்ட மலேசியா ட்ராமாவில் ரோகினி மாட்டிக் கொள்ளக் கூடாது என்று ரோகிணியே அவருக்கு சூனியம் வைத்து விட்டார்.

அந்த வகையில் இனி இந்த பிரச்சனையிலிருந்து ரோகினி தப்பித்து இருந்தாலும் அடுத்து பிரவுன் மணி அங்கே தான் சுற்றிக்கொண்டு இருப்பதால் மீனா கண்ணில் சிக்கப் போகிறார். அந்த வகையில் இந்த விஷயம் முத்துவுக்கு தெரியவரும் பொழுது முதலில் பிரவுன் மணியை கண்டுபிடித்தால் ரோகினையின் ரகசியங்களையும் குடும்பங்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று முத்து பிளான் பண்ணப் போகிறார்.

ஆனால் அதற்குள் ரோகிணி வைத்திருக்கும் பார்லர் அவருடையது கிடையாது. அங்கே வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தான் என்ற உண்மையையும் முத்து மூலம் தெரியவரப்போகிறது. என்ன நடந்தாலும் அசராமல் பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி புருசனையும் குடும்பத்தையும் ஏமாற்றி வரும் ரோகிணி மிகப்பெரிய தில்லாலங்கடி தான். ஆனால் நிச்சயம் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். அதுவும் கூடிய விரைவில் நடக்கப்போகிறது.

Trending News