புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நொந்து போய் சூர்யா பிரஸுக்கு கொடுத்த அறிக்கை.. வெளிப்படையாய் அட்டாக் பண்ணும் கௌதமேனன்

கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் நிறைய சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். பேட்டிகள் அனைத்தும் சுவாரசியமாக இருக்கிறது. நீயா நானா கோபிநாத்துடன் கௌதம் மேனன் பேசுகையில் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

ஆரம்பத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு காக்க காக்க, வாரணமாயிரம் என இரண்டு பெரிய படங்கள் ஹிட் கொடுத்துள்ளார் கௌதமேனன். அதன்பின் இந்த படத்தின் ஒன் லைன் கதையை சொல்லி இருவரும் மீண்டும் இணைவதாக இருந்தது.

துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனனே தயாரிப்பதாகவும் இருந்தார். ஆனால் இந்த படத்தில் சூர்யா நடிக்க மறுத்துவிட்டார். இப்பொழுது இதை வெளிப்படையாக கௌதமேனன் தனது பேட்டியில் கூறியிருந்தார். எப்பொழுதுமே கெளதம் முழு கதையையும் சொல்ல மாட்டார். சூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து கதை எழுதக்கூடிய இயக்குனர்.

இந்த படத்திற்கு சம்மதம் தெரிவித்து பல மாதங்கள் சூர்யா காத்திருந்தார். ஆனால் கௌதம் தரப்பில் கதை ரெடி பண்ணவே இல்லை. இதனால் சூர்யா தரப்பில் அப்பவே பத்திரிக்கையாளர்களை அழைத்து இனி கௌதம் மேனன்னுடன் படம் பண்ண மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

இன்னொரு பக்கம் இந்த படத்தை கௌதம்மேனனே தயாரிக்க வேண்டாம் எனவும் சூர்யா அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இப்பொழுது விக்ரம் அந்த படத்தில் நடித்து, கௌதம் மேனனே தயாரித்தும் . பல பிரச்சனைகள் உண்டாகி இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. நல்ல வேலையாக சுதாரித்துக் கொண்ட சூர்யா தெளிவாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

Trending News