Santhanam: சுந்தர் சி, விஷால், சந்தானம் கூட்டணியில் மதகஜராஜா பொங்கலுக்கு ரிலீசானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு வெளியான படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
அதிலும் படத்தில் இடம்பெற்று இருந்தா நகைச்சுவை காட்சிகள் பெரிய லெவெலில் ரீச் ஆனது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் தரமான ஒரு படத்தை என்ஜாய் செய்தனர்.
இதுவரை வன்முறை அடிதடி ரத்தம் போன்ற படங்களை பார்த்து ஆடியன்ஸ் நொந்து போயிருந்தனர். இதனால் கோலிவுட்டில் ஒரு நகைச்சுவை வறட்சி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்டவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் வந்த இப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய வேண்டும் என்ற ஆசையும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
எல்லா புகழும் சுந்தர் சி-க்கே
இது எல்லாவற்றையும் விட சந்தானம் ஈகோ பார்க்காமல் மறுபடியும் காமெடியில் கலக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. அது தற்போது நிறைவேற போகிறது.
ஏற்கனவே இப்படி ஒரு எண்ணத்தில் இருந்த சந்தானம் தற்போது முடிவே செய்து விட்டாராம். இனிமேல் காமெடி ரோலிலும் இறங்குவதற்கு அவர் தயாராகி இருக்கிறார்.
அதன்படி மே மாதம் அவருடைய டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக இருக்கிறது. அதை அடுத்து விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
அதேபோல் ஆர்யாவுடன் ஒரு படமும் ரவி மோகனுடன் ஒரு படமும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இந்த பெருமை எல்லாம் சுந்தர் சி யை தான் சேரும். இந்த படம் மட்டும் வரவில்லை என்றால் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்காது என ரசிகர்கள் அவரையும் வாழ்த்தி வருகின்றனர்.