லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். 2022 பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த விக்னேஷ் சிவன் இப்பொழுது இந்த படத்தை கையில் எடுத்துள்ளார். அவர் கடைசியாக இயக்கிய படம் காத்து வாக்கில்இரண்டு காதல். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த படம் பிளாப்பானது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஓரளவு வெற்றி பெற்ற படம் என்றால் அது நானும் ரவுடி தான் மட்டுமே. அந்த படத்திற்கு பிறகு இரண்டு மூன்று படங்கள் எடுத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்கவில்லை. இடையில் அஜித்தை இயக்கும் வாய்ப்பு கூட கிடைத்தது ஆனால் அதுவும் பறிபோனது.
இப்பொழுது பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வைத்த பெயர் lic. பிரச்சனை வந்ததால் Lik என்று மாற்றியுள்ளார். நீண்ட நாட்களாக இந்த படத்தை இழுத்தடித்துக் கொண்டே போனதால் இதன் தயாரிப்பாளர் லலித், விக்னேஷ் சிவனிடம் பிரச்சனை செய்தார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் இந்த படத்திற்கு நிறைய செலவழித்து விட்டதாகவும். இனிமேல் இவரை நம்பி இவ்வளவு காசு கொடுக்க முடியாது என ஒரு கட்டத்தில் லலித் பின்வாங்கி விட்டார். இதனால் விக்னேஷ் சிவனே இந்த படத்தை தன்னுடைய சொந்த காசை போட்டு தயாரித்துள்ளார்.
இப்பொழுது இந்த படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் லலித்துடன் ஏற்பட்ட பஞ்சாயத்து முடிந்தால் தான் இந்த படம் பிரச்சனை இல்லாமல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதாலும் அதிக பட்ஜெட் ஆனாலும் லலித் பாதியிலே பின் வாங்கி விட்டார். அவர் செலவழித்த காசுக்கு நிச்சியமாக பிரச்சனை செய்வார்.