Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, அண்ணன்களின் மானத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராஜி வாழ்க்கையை சரி செய்ய பாண்டியனுக்கு தெரியாமலேயே கதிரை வலுக்கட்டாயமாக ராஜிக்கு கட்டி வைத்தார். பிடிக்காமல் கல்யாணம் பண்ணி இருந்தாலும் தற்போது இரண்டு பேரும் மனம் ஒத்தும் தம்பதிகளாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இது எதுவுமே தெரியாத சக்திவேல் மற்றும் முத்துவேல், பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் பாண்டியனை அசிங்கப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். அந்த வகையில் சக்திவேலுவின் மகன் குமரவேலுக்கு வெளியே எங்கும் பொண்ணு கிடைக்காததால் கையில நெய்ய வெச்சுகிட்டு வெண்ணெய்க்கு ஏன் அலையனும் என்று குமரவேலுவை உசுப்பேத்தி விட்டார்.
அதாவது பாண்டியனின் மகளை நீ கல்யாணம் பண்ணி விட்டால் உனக்கும் கல்யாணம் நடந்துவிடும். பாண்டியனையும் அவமானப்படுத்துவதற்கு நமக்கு ஒரு துருப்புச்சீட்டு கிடைத்துவிடும் என்று குமரவேலுவை உசுப்பேத்தி விட்டார். அதிலிருந்து குமரவேலுக்கு இதுதான் முழு நேர வேலை என்பதற்கு ஏற்ப பாண்டியனின் மகள் அரசி பின்னாடியே சுற்றி வருகிறார்.
அரசிக்கும் குமரவேலு தன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறார் என்ற விஷயம் தெரிந்து விட்டது. இருந்தாலும் இதைப்பற்றி குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லாமல் அரசி மறைத்து வைத்திருக்கிறார். இதுதான் பிளஸ் பாயிண்ட் என்பதற்கு ஏற்ப குமரவேலு ஓவராக அட்வான்டேஜ் எடுத்து எப்படியாவது அரசியை கல்யாணம் பண்ணி விடுவேன் என்ற தீர்மானத்துடன் இருக்கிறார்.
அதற்கு ஏற்ற மாதிரி அரசி மனசிலும் தற்போது குமரவேலு பற்றிய அபிப்ராயம் வந்துவிட்டது. அந்த வகையில் குமரவேலு விரித்த வலையில் அரசி சிக்கிவிட்டால் பாண்டியனுக்கு மட்டும் இல்லாமல் அரசிக்கும் மிகப்பெரிய பேராபத்தாக முடிந்துவிடும். பிறகு அனைவரும் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து பொங்கல் விட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் எல்லோரும் ஜோடி ஜோடியாக இருப்பதை பார்த்த கோமதி அம்மா, பழனிவேலுக்கு மட்டும் ஜோடி இல்லாமல் தனியாக நிற்பதை பார்த்து பீல் பண்ணுகிறார். உடனே பழனிவேலு, நான் இந்த நிலைமையில் நிற்பதற்கு காரணமே உன்னுடைய மகன்கள் தானே என்று பாவமாக சொல்கிறார். கெட்டவன் நம்பி போறதை விட நல்லவன் கூட வாழ்ந்து விடலாம் என்பதற்கு ஏற்ப பழனிவேலுவும் அரசியும் ஒன்றாக சேர்ந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் குமரவேலு இது எதுவும் நடந்ததாக படி முழு நேர வேலையாக அரசி பின்னாடி சுற்றி வருகிறார். இந்த குமரவேலு எதுக்கு சரிப்பட்டு வருவாரோ இல்லையோ இந்த விஷயத்துக்கு தீயா வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில் அரசி போகும் இடமெல்லாம் பின்னாடியே அலைந்து அரசியை ரூட் விடுகிறார். அரசியும் இது தெரிந்தும் தெரியாதபோல் போகிறார். இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறதோ என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து வருகிறது.