Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எடுத்த சமையல் ஆர்டரை நல்லபடியாக முடித்து விட்டார். அந்த வகையில் அதில் அதிக லாபம் கிடைத்ததால் கொடுக்க வேண்டிய ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விடுகிறார். அத்துடன் கோபி அவருடைய ஹோட்டலில் இருந்து வரவழைத்த செப்புக்கும் பணத்தை கொடுக்க சொல்லி பாக்யா, கோபிக்கு பணம் கொடுக்கிறார்.
கோபி இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்த நிலையில் பாக்கியம் நீங்க எனக்கு உதவி பண்ணி இருக்கீங்க. அதற்கு நான் சம்பளம் கொடுத்து ஆக வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி கோபிக் கையில் பணத்தை கொடுத்து விடுகிறார். பிறகு பாக்யா, கோபியிடம் நீங்களும் உங்கள் மனைவியும் இந்த வீட்டில் தங்குவதற்கு பத்து நாளைக்கு வாடகை கொடுத்து இருக்கீங்க.
அதனால் இன்னும் இரண்டு நாளில் நீங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிடும் என்று எச்சரிக்கை கொடுக்கிறார். அதற்கு கோபி அடுத்து நாங்கள் இருக்க போற நாளுக்கும் சேர்த்து பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார். இதை கேட்ட இனியா, அப்பா உனக்கு எவ்வளவு உதவி பண்ணியிருக்காங்க அதைக்கூட மறந்துட்டு இப்படி பிடிவாதமாக அப்பாவை வீட்டை விட்டுவிட்டு அனுப்புவதில் குறியாக இருக்கிறாயே என்று கேட்கிறார்.
அத்துடன் ஈஸ்வரியும் பாக்யாவை திட்டும் அளவிற்கு பேசுகிறார். ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதிகா, பாக்யாவிடம் வந்து இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்புகிறோம் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி நீ ஏன் என்னுடைய பையன் விஷயத்தில் தலையிடுகிறாய் என்று ராதிகாவை திட்டுகிறார்.
அதற்கு ராதிகா எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது, என்னை அவர் ஒன்னும் இந்த வீட்டுக்கு நிரந்தரமாக இருப்பதாக சொல்லி கூட்டிட்டு வரவில்லை. உடம்பு சரி ஆகும் வரை இந்த வீட்டில் இருந்துவிட்டு கிளம்பிடலாம் என்று சொல்லி தான் என்னை கூட்டிட்டு வந்தார். அந்த வகையில் கோபியின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று நான் ஏற்கனவே மருத்துவரிடம் கேட்டு விட்டேன்.
இனி கோபிக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் இன்னும் இரண்டு நாட்களில் நாங்கள் வீட்டை விட்டு கிளம்புகிறோம் என்று ராதிகா சொல்லி விடுகிறார். உடனே பாக்கியாவும் சரி என்று சொல்லி ரூம்குள் போய்விடுகிறார். பிறகு கோபி இந்த வீட்டை விட்டு போய்விடுவாரோ என்ற பயத்தில் இனியா மற்றும் ஈஸ்வரி புலம்புகிறார்கள்.
இவர்களை சந்தித்து பேசிய கோபியிடம் ஈஸ்வரி, கோபி மனசை மாற்றும் அளவிற்கு உள்ளே புகுந்து டிராமா போட ஆரம்பித்து விட்டார். போதாதற்கு இந்த இனியாவும் சேர்ந்து சென்டிமென்ட் ட்ராமாவை போட ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து கோபி நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு ராதிகாவிடம் பேசுவதற்கு போய்விடுகிறார்.
அப்படி ராதிகாவிடம் பேசும் பொழுது நீ ஏன் அவசரப்பட்டு சொன்னாய். நாம் இந்த வீட்டிலேயே இருந்திடலாம் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா நான் தான் வீடு வாடகை எடுத்து வைத்திருக்கிறேன். அதில் போய் நாம் இருக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு கோபி நான் இங்கே இருந்தால் தான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பேன். அதனால் என்னை புரிந்து கொள் என்று ராதிகாவை சமாதானப்படுத்த பார்க்கிறார்.
ஆனால் ராதிகா இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பி விட வேண்டும் என்று கோபிக்கு கெடு வைத்திருக்கிறார்.