Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து போட்ட பிளான் படி மலேசியாவுக்கு யாரும் போகக்கூடாது என்பதற்காக ரோகிணி புதுசாக ஒரு டிராமாவை போட்டுவிட்டார். அதன்படி மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணியை வீட்டிற்கு வரவழைத்து ரோகிணியின் அப்பா ஜெயிலுக்குள் இறந்து விட்டதாகவும் இனி யாரும் அங்கு போக வேண்டாம் என்பதையும் சொல்ல வைக்கிறார்.
அப்படி ப்ரோன் மணி, விஜயா வீட்டுக்கு வந்து ரோகிணி சொல்லிக் கொடுத்த விஷயத்தை அப்படியே சொல்லி ஒரு டிராமாவை போடுகிறார். உடனே ரோகிணியும் அப்பா இறந்து போயிட்டதாக அழுகாச்சி ட்ராமாவை போட்டு அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார். பிரவுன் மணி மற்றும் ரோகிணியின் நடிப்பை பார்த்து மொத்த குடும்பமும் நம்பி உண்மையிலேயே ரோகிணியின் அப்பா இறந்து போய் விட்டதாக நினைத்து அனைவரும் ஆறுதல் படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் முத்துக்கு மட்டும் இன்னும் சந்தேகம் அதிகரித்துவிட்டது. பிறகு ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும் போது மீனாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டதாகவும் கழுத்தில் கத்தி வைத்து எல்லா உண்மையும் வீட்டில் வந்து சொல்ல சொல்லி மிரட்டுவதாகவும் கனவு காண்கிறார். பிறகு பயத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த ரோகினி இடம் மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்கிறார். உடனே ரோகிணி, மனோஜிடம் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்.
இதனை அடுத்து ரோகிணி, வித்யா வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் கனவு கண்ட விஷயத்தையும் மீனாவுக்கு முத்துவுக்கும் தன் மீது சந்தேகம் வந்திருக்கிறது என்பதையும் பற்றி பேசுகிறார். அப்பொழுது ரோகினி அம்மா அங்கே வருகிறார். வந்ததும் ரோகிணியின் ஒரிஜினல் அப்பா போட்டோவை கொடுக்கிறார். இதை பார்த்த வித்யா, ரோகினிடம் இதை வைத்து என்ன பண்ண போற என்று கேட்கிறார்.
அதற்கு ரோகிணி அப்பா இறந்து விட்டதாக சொல்லியாச்சு இப்போ இன்னும் அதை உறுதிப்படுத்தும் விதமாக அனைவரையும் நம்ப வைப்பதற்கு இந்த போட்டோ தேவைப்படுகிறது என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து ரோகிணி, ஒரிஜினல் அப்பா போட்டோவை விஜயா வீட்டுக்கு கொண்டுட்டு வந்து மாட்ட போகிறார். ஆனால் இந்த போட்டோ ஏற்கனவே ரோகிணியின் அம்மா வீட்டில் மாட்டி இருந்ததை முத்து மற்றும் மீனா பார்த்திருப்பார்கள்.
அந்த வகையில் மீனாவிற்கு இந்த ஃபோட்டோ எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறது என்று சந்தேகம் வரப்போகிறது. சும்மா இருந்த விஷயத்தில் எஸ்கேப் ஆக வேண்டும் என்று நினைத்த ரோகிணி தானாகவே பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறார். இதற்கிடையில் விஜயா, பார்வதி வீட்டில் பரதநாட்டியம் சொல்லிக் கொடுப்பதை தெரிந்து மீனாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சிந்தாமணி விஜயாவிடம் பேசி பழகுகிறார்.
அப்படி பழகும் பொழுது விஜயாவிற்கு மீனாவை பிடிக்காது என்ற விஷயத்தை சிந்தாமணி தெரிந்து கொள்கிறார். இது போதும் இது வைத்தே நான் மீனாவை என் வழியில் குறுக்கிடாதபடி பார்த்துக் கொள்வேன் என்று பிளான் போட்டுக் கொண்டார். மேலும் ரோகிணி ஒரு வழியா மலேசியா கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாச்சு என்று பெருமூச்சு விடும் அந்த நேரத்தில் இனிமேல் தான் பிரச்சனையை இருக்கிறது என்பதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனாவிடம் வசமாக சிக்க போகிறார்.