வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சீரியலில் நடிப்பதற்கு குட் பாய் சொன்ன பிக் பாஸ் ராயன்.. சேரன் கேரக்டருக்கு புதுசாக என்டரி கொடுக்கும் கதாநாயகன்

Bigg Boss 8 Rayan: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பனிவிழும் மலர்வனம் என்ற சீரியல் மக்களின் பேவரைட் சீரியலாக இருக்கிறது. இதில் சேரன் என்ற கதாபாத்திரத்தில் ராயன் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்தார். இவர் ஏற்கனவே தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நெகட்டிவ் கேரக்டரை வெளிக்காட்டினார்.

ஆனால் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும் இவருடைய நடிப்புக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்ததால் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அனுபமாவின் கணவராக சேரன் கதாபாத்திரம் மக்களை அதிகமாக கவர்ந்தது.

இந்த சூழ்நிலையில் ராயனுக்கு பிக் சீசன் 8ல் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சீரியலில் இருந்து பிரேக் எடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக் பாஸில் இவருடைய ஆட்டமும் விளையாட்டும் நன்றாக இருந்ததால் தொடர்ந்து வீட்டுக்குள்ளே அவரை தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் டிக்கெட் 2 பின்னாலே வெற்றி பெற்று டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக ராயன் வந்தார்.

இதற்கிடையில் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் இவருடைய கதாபாத்திரத்தை நீக்காமல் இவருக்கு பதிலாக வேறு ஒரு புது ஆர்டிஸ்ட்களையும் கொண்டு வராமல் ரயானுக்காக மொத்த டீமும் காத்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த ரயான் மறுபடியும் சீரியலில் தொடர்வார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

thejank
thejank

ஆனால் ரயான் சீரியலில் இனி நடிப்பதில்லை என்று சீரியலுக்கு குட் பாய் சொல்லும் விதமாக பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் இருந்து விலகி விட்டார். இதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்(mr housekeeping) என்ற படத்திலும் ரயான் நடித்திருப்பதால் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனால் தான் சீரியலில் நடிக்க விருப்பம் இல்லாமல் ரயான் சின்னதிரையில் இருந்து விலகி இருக்கிறார். மேலும் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் சேரன் கதாபாத்திரத்திற்கு ரயானுக்கு பதிலாக தேஜாங்க் என்கிற ஒரு கதாநாயகன் என்டரி கொடுக்கப் போகிறார்.

Trending News