Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவருடைய சொந்த வீட்டிலேயே ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளி வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவருக்கு தான் கத்தியால் குத்தியது ஒரு நடிகர் என்றே தெரியாது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உடல் நலம் தேறி சைஃப் அலிகான் தற்போது வீடு திரும்பி விட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஒரு சில நாளிலேயே அவருக்கு இன்னொரு மிகப்பெரிய பேரிழப்பும் காத்திருந்திருக்கிறது.
அதாவது அவருடைய 15 ஆயிரம் கோடி சொத்து மற்றும் தன்னுடைய குழந்தை பருவத்தை கழித்த ராஜ அரண்மனையை இழக்கும் சூழ்நிலை.
இதற்கு காரணம் இவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. நடிகர் சைஃப் அலிகான் மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் நவாப் அரசு குடும்பத்தின் வாரிசு.
கத்திகுத்துக்கு பின் நடந்தது என்ன?
இவருடைய அம்மாவின் சகோதரி இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடியேறிவிட்டார்.
அதனால் அலிகான் அம்மா அரச குடும்பத்தின் அனைத்து சொத்துக்களுக்கும் உரிமையாக இருந்தார். இதை தொடர்ந்து சைஃப் அலிகான் மொத்த சொத்தின் வாரிசாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்கள் எதிரி சொத்துக்கள் என்ற கணக்கில் மத்திய அரசின் கண்காணிப்புக்கு கீழ் வரும் என சட்டம் வெளியானது.
இதை எதிர்த்து சைஃப் அலிகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பு அவருக்கு சாதகமாகவும் வந்தது.
இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. மேலும் போபால் மாநிலத்தில் உள்ள நவாப் சொத்துக்கள் அவர்களுடைய வாரிசுகளுக்கு போகாது.
மத்திய அரசின் எதிரி சொத்துக்கள் பாதுகாப்பு குழுவிடம் சென்று விடும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
மேலும் இது குறித்து சைஃப் அலிகான் மேல்முறையீடு செய்து நிவாரணத்தை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.
30 நாட்கள் கெடு கொடுத்து இருந்த நிலையில் சைஃப் அலிகான் மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை.
இதனால் அவருடைய 15 ஆயிரம் கோடி சொத்து மற்றும் ராஜா அரண்மனையை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.