நேற்று சுந்தர் சி தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதற்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் கோலாகலமான பர்த்டே பார்ட்டியும் நடந்துள்ளது.
அந்த பார்ட்டியில் திரையுலகின் அனைத்து முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.
அந்த போட்டோக்களை குஷ்பூ தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சினேகா விஷால் யோகி பாபு இயக்குனர் வாசு மீனா ராதிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பார்ட்டியை என்ஜாய் செய்துள்ளனர்.
அதில் அதிக கவனம் பெற்றது வைகை புயல் வடிவேலு, பிரசாந்த் வருகைதான்.
இருவருடனும் சுந்தர் சி எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அப்புறம் என்ன அடுத்தது வின்னர் 2 தான் என ஜாலி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் சுந்தர் சி யிடம் வின்னர் 2 குறித்து கேட்டு வருகின்றனர்.
தற்போது மதகஜராஜா வெற்றி பெற்ற நிலையில் வின்னர் 2 ஆரம்பிக்கப்படலாம் என தெரிகிறது.