வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சந்தியா ராகம் சீரியலில் தனத்திடம் கதிரை விவாகரத்து பண்ண சொல்லும் ரகுராம்.. மாயாவிடம் தோற்கப் போகும் புவனேஸ்வரி

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், கார்த்திக் எப்படி உயிரோடு வந்தார் யார் காப்பாற்றினார் என்ற கேள்வி புரியாத புதிராக இருந்தது. அதை எடுத்து சொல்லும் விதமாக புவனேஸ்வரி, செய்த சதியை சொல்ல ஆரம்பித்து விட்டார். அதாவது கார்த்திக் தலையில் ஜானகி அடித்து விட்டு மாயாவை கூட்டிட்டு வீட்டிற்கு போய்விட்டார்.

இந்த நேரத்தில் லிங்கம் வந்து கார்த்திக் கழுத்தை நெறித்துவிட்டார். பிறகு லிங்கம், கார்த்தி இறந்துவிட்டார் என்று போய்விட்டார். அந்த நேரத்தில் எதிர்ச்சியாக நான் கார்த்திக்கை தேடி நம்முடைய பண்ணை வீட்டுக்கு போனேன். அங்கே போய் பார்த்தால் கார்த்திக் அடிபட்டு கீழே கிடந்தார். கார்த்திக்கை நான் பார்த்த பொழுது அவனுக்கு உயிர் இருந்தது.

உடனே அவனை எழுப்பி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் வெளியே போன ஜானகி மற்றும் மாயா திரும்பவும் வந்து விட்டார்கள். இவர்கள் ஏன் வந்திருக்காங்க என்ன பண்ணப் போறாங்க என்பதை நான் மறைந்து இருந்து பார்த்தேன். அப்பொழுது கார்த்திக்கிடம் நீ இறந்த மாதிரி நடி மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அந்த நேரத்தில் மாயா, போனை எடுத்துட்டு போகும்பொழுது கார்த்திக்கு மூச்சு இருக்கிறதா என்று பார்த்தார். அப்பொழுது மூச்சு இல்லை என்று நினைத்து மாயா மற்றும் ஜானகி இருவரும் சேர்ந்து நம் பண்ணை வீட்டில் கார்த்திகை புதைத்து விட்டார்கள். பிறகு அவர்கள் போனதும் நான் கார்த்திக்கை வெளியே தூக்கி விட்டேன். அத்துடன் அவனுக்கு தேவையான மருத்துவத்தையும் கொடுத்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பிணத்தை போட்டு புதைத்து விட்டோம்.

மேலும் கதிர் மீது சந்தேகம் வர வேண்டும் என்பதற்காக கதிர் பர்ஸ் என்னிடம் இருந்தது. அதை அந்த இடத்தில் போட்டு விட்டேன் என்று புவனேஸ்வரி மற்றும் கார்த்திக் செய்த சதிகளை எல்லாத்தையும் ஒன்னு விடாமல் லிங்கத்திடம் கூறிவிட்டார். தற்போது கார்த்திக் உயிரோடு இருப்பது யாருக்கும் தெரியாது. அதனால் பஞ்சாயத்து கூட்டி ரகுராமை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி காட்டுவேன் என்று புவனேஸ்வரி கூறுகிறார்.

இது எதுவும் தெரியாத மாயா, கதிரை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று ஜாமீனுக்கு போராடுகிறார். ஆனால் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் கதிரிடம் எப்படி உன்னுடைய பர்ஸ் அங்கே போச்சு, எப்பொழுது காணாமல் போச்சு என்ற விவரத்தை கேட்டுக்கொள்கிறார். அந்த வகையில் புவனேஸ்வரி செய்த சதியை கண்டுபிடிப்பதற்கு மாயா முயற்சி எடுத்து புவனேஸ்வரியை தோற்கடித்து விடுவார்.

இதற்கு இடையில் கதிர் ஒரு கொலை பண்ண கொலையாளி ஜெயிலில் இருக்கிறார். இப்படிப்பட்டவர் உனக்கு புருஷனாக இருக்க தேவையில்லை என்று ரகுராம், தனத்திடம் சொல்லி கதிரை விவாகரத்து பண்ண முயற்சி எடுக்கப் போகிறார். ஆனால் கதிர் எதற்காக இப்படி பண்ணினார், மாயா செஞ்ச காரியம் என்ன என்று எல்லா உண்மையும் தனத்திற்கு தெரிந்ததால் நிச்சயம் கதிரை விவாகரத்து பண்ண மாட்டார்.

Trending News