வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாடிவாசல் படத்திற்கு சூர்யா கொடுத்த டெட்லைன்.. ரோலஸ்க்கு பட்ட நாமம் போடப்போகும் வெற்றி மாறன்

பல போராட்டங்களுக்கு பின் ஒரு வழியாக வாடிவாசல் படத்திற்கு கதவு திறந்துள்ளது. சூர்யா வீட்டில் பொங்கலை ஒட்டி வாடிவாசல் சம்பந்தமான ஒரு சந்திப்பு நடைபெற்று உள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த மீட்டிங் பாசிட்டிவாக முடிந்தாலும் சூர்யா பல விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த படத்தை இரண்டு முதல் இரண்டரை மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என்பதுதான் சூர்யாவின் முதல் கண்டிஷன். ஏப்ரல் மாதம் இதற்கு டேட் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார் சூர்யா. தொடர்ந்து பிசியாக இருப்பதால் இந்த படத்தையும் விரைவாக முடித்து தரும்படி கூறியுள்ளார்.

ஏப்ரலில் ஆரம்பித்து 2025 டிசம்பர் இறுதி வரை படப்பிடிப்புக்கான கால அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்கு மேல் படத்திற்கான வேலைகளில் தான் ஈடுபட மாட்டேன் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். யார் நடித்தாலும் பரவாயில்லை என்ற சமரச முடிவும் வந்திருக்கிறது.

இதனால் தயாரிப்பாளர் தரப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது. கலைப்புலி எஸ் தானு இந்த படத்தை தயாரிக்கிறார். ஆனால் சூர்யாவை விட இந்த படத்திற்கு இன்னொரு பிரச்சனை என்றால் அது இயக்குனர் வெற்றிமாறன் தான். ஏற்கனவே விடுதலை இரண்டாம் பாகம் எடுப்பதற்கு ஓர் ஆண்டுகளுக்கு மேல் எடுத்து விட்டார்.

அதனால் வாடிவாசல் படம் சொன்ன நேரத்தில் முடியுமா என்பது சந்தேகம்தான். எடுத்த காட்சிகளில் எளிதில் திருப்தி அடைய மாட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அவர் 200 சதவீதம் திருப்தி அடைந்தால் மட்டுமே அந்த காட்சியை படத்தில் வைப்பார். ஆனால் சூர்யா ஆரம்பிக்கும் முன் டெட்லைன் கொடுத்துள்ளார்.

Trending News