வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆரம்பித்த இடத்திலேயே முடித்த விஜய்.. தளபதி 69 டைட்டில் ரெடி, அறிவிப்பு வரும் நாள்

விஜய் அரசியலுக்கு வந்ததால் தளபதி 69 டைட்டில், அரசியல் சம்பந்தமான ஒன்றாக தான் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே தலைவா என்று வைத்துவிட்டனர் அதை போல் டைட்டில் இருக்க வேண்டும் என தேர்ந்தெடுத்து வந்தனர்.

இதற்கிடையில் பாஸ் என்ற டைட்டிலை வைக்கலாம் என முடிவு எடுத்தனர் அதுவும் இங்கிலீஷ் மொழியில் வருகிறது. அதேபோல் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இந்த டைட்டிலைத் தான் அவர்களும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதனால் தளபதியா 69 படத்திற்கு நாளைய தீர்ப்பு என்ற டைட்டிலை வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். விஜய் நடித்த முதல் படத்தின் பெயர் நாளைய தீர்ப்பு. இப்பொழுது கடைசி படத்திற்கும் நாளைக்கு தீர்ப்பு என்ற பெயர் வைத்தால் பொருத்தமாக தான் இருக்கும்.

இந்த படத்தின் டைட்டிலை உறுதி செய்த பின் அதை ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று அறிவிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர். H.வினோத்இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அரசியல் சப்ஜெக்ட் தானாம்.

தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் புகழ் பாபி தியோல் வில்லன் கதாபாத்திரம் பண்ணுகிறார். இவர்களை தவிர கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நரேன் போன்ற நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

Trending News