ரெட்ரோ, சூர்யா 45, வாடிவாசல் என பிசியாய் வலம் வருகிறார் சூர்யா. இதில் கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதன்பின் சூர்யா 45 படத்திற்காக ஆர் ஜே பாலாஜியுடன் கைகோர்க்கிறார். வாடிவாசல் படத்திற்கும் ஏப்ரல் மாதம் கால் சீட் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே சூர்யா, பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு மேனேஜராக செயல்படுபவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனக்கும் நல்ல கதைகளை தேர்வு செய்து கொடுக்கும்படி அவரிடம் கேட்டுள்ளார். இப்படி கதை தேர்வில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு வருகிறார்.
வாடிவாசல் படத்தை முடித்த பிறகு சூப்பர் ஹிட் பட இயக்குனர் ஒருவருடன் கை கோர்க்கிறார். வாத்தி, லக்கி பாஸ்கர போன்ற படங்களை இயக்கியவர் வெங்கி அட்லுரி. இவர் தான் கூடிய விரைவில் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் லக்கி பாஸ்கர். வெறும் 56 கோடி களில் எடுக்கப்பட்ட இந்த படம் 120 கோடிகள் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஷேர் மார்க்கெட் சம்பந்தமான கதையை கொடுத்து அசத்தினார் வெங்கி.
கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ படம் முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. ஆர் ஜே பாலாஜி மற்றும் வெற்றிமாறன் படங்களை முடித்த பிறகு சூர்யா வெங்கியுடன் இணைகிறார். வாடிவாசல் படத்திற்கு ஏப்ரல் மாதம் கால் சீட் கொடுத்துள்ளார். அது வருகிற 2026 பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.