சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

சகலையுடன் மோதிக்கொண்ட முத்து, லவ் ட்ராக்கில் சிக்கிய சீதா.. போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கிய மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மலேசியா கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று யோசித்த ரோகினி மலேசியாவில் இருக்கும் அப்பா இறந்து போய்விட்டார் என்ற ஒரு டிராமாவை போட்டு குடும்பத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து விட்டார். இதனால் அப்பா புகைப்படத்தை காட்டி எல்லோரையும் திசை திருப்ப வேண்டும் என்று நினைத்த ரோகிணி, ஒரிஜினல் அப்பா போட்டோவை கொண்டு வரச் சொல்லி அதை வீட்டிற்கு எடுத்துட்டு போகிறார்.

போனதும் அதை குடும்பத்தில் இருப்பவர்களிடம் காட்டி இதுதான் என்னுடைய அப்பா என்று மறுபடியும் அழுகாட்சி டிராமாவை போட்டு ஒரு சென்டிமென்ட் சீனை உருவாக்கினார். ரோகினியின் அழுகையை பார்த்ததும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நம்பி விடுகிறார்கள். அத்துடன் ரோகினியை ஆறுதல் படுத்தும் விதமாக விஜயா மற்றும் மனோஜ் சமாதானப்படுத்துகிறார்கள்.

அப்பொழுது அங்கே வந்த முத்து மற்றும் மீனா இது என்ன சீன் போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு ரவி, ரோகிணி அண்ணி அப்பா போட்டோவை கொண்டுட்டு வந்து அழுகுறாங்க என்று சொல்கிறார். உடனே முத்து, ரோகினி அப்பா போட்டோவை பார்த்து இவர் என்ன மலேசியாக்காரர் மாதிரி இல்லை என்று சொல்கிறார்.

ஏதோ பக்கத்து வீட்டு அங்கிள் மாதிரி தான் தெரிகிறது என்று சொல்லியதும் விஜயாவுக்கும் சின்ன சந்தேகம் வந்துட்டு. ஆனாலும் ரோகிணி எந்தவித சந்தேகமும் வராதபடி பேசி சமாளித்து விடுகிறார். இதற்கிடையில் முத்து மற்றும் மீனா வழக்கம் போல் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியை பார்ப்பதற்கு போகிறார்கள். அப்படி போகும் போது அங்கே அவர்கள் செருப்பு கடை போட்டிருப்பதை பார்த்ததும் டிராபிக் போலீஸ் அந்த கடையை காலி பண்ணி அங்கிருந்து போக சொல்கிறார்கள்.

உடனே அந்த பாட்டி போலீஸிடம் கெஞ்சுகிறார். போலீஸ் அந்த பாட்டியை உதாசீனப்படுத்தும் விதமாக கீழே தள்ளி விடுகிறார். அப்பொழுது அந்த பாட்டி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வந்து விடுகிறது. இதனைப் பார்த்த முத்து அந்த டிராபிக் போலீஸ் சட்டையை பிடித்து நியாயம் கேட்கும் அளவிற்கு கோவப்படுகிறார். உடனே அந்த போலீசும் முத்து மீது கோபப்பட ஆரம்பித்து விட்டார். இருந்தாலும் பொது ஜனங்கள் இருக்கும் இடத்தில் இப்போது எதுவும் செய்ய வேண்டாம் என்று மற்ற போலீசார் சமாதானப்படுத்தி கூட்டிட்டு போய்விடுகிறார்கள்.

இதனை அடுத்து கீழே விழுந்த அந்தப் பாட்டியை ஹாஸ்பிடலில் முத்து மீனா கொண்டு போய் சேர்க்கிறார்கள். உடனே இந்த பாட்டிக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்று சொல்லியதால் முத்து நான் தெரிந்தவரிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். அப்படி வீட்டுக்கு வரப் போவது தான் ரோகிணி அப்பாவின் டிராமாவை அரங்கேற்றுகிறார்.

இதையெல்லாம் முடித்துவிட்டு முத்து, பாட்டிக்கு கொடுக்க வேண்டிய பிளட் குரூப் பத்தி சொல்கிறார். உடனே அண்ணாமலை, மனோஜ்க்கு அந்த பிளட் குரூப் தான் என்று சொல்லிய நிலையில் மனோஜ் என்னால் முடியாது. நான் யாருக்கும் ரத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மறுப்பு தெரிவித்து போய்விடுகிறார்.

அப்பொழுது முத்துவை தேடி போலீஸ் வீட்டுக்கு வருகிறார்கள். வந்ததும் போலீஸ் மீது கோபப்பட்டு சட்டை பிடித்த காரணமாக முத்துவை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்கிறார்கள். உடனே வழக்கம் போல் விஜயா, இந்த முத்துவுக்கு இதுவே வேலை என்று மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் மீனா மற்றும் முத்து அங்கு என்ன நடந்தது என்ற விஷயத்தை சொல்லியதும் அண்ணாமலை ரவி மற்றும் சுருதி அனைவரும் முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இருந்தாலும் போலீஸ், முத்துவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள். அங்கே ரோகினி மற்றும் மனோஜ் கோவிலில் வாங்கிய வீடியோவை பற்றி விசாரிப்பதற்கு வருகிறார்கள். ஆனாலும் மனோஜ் அவருடைய மக்கு அறிவை பயன்படுத்தியதால் போலீஸிடம் அடிவாங்கும் அளவிற்கு அவமானப்பட்டு விட்டார். இதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் மேல் அதிகாரி வந்ததும் என்ன நடந்தது என்று முத்துவிடவும் டிராபிக் போலீஸ் இடமும் விசாரணை பண்ணுகிறார்கள்.

அப்பொழுது முத்து கோபப்பட்டது சரியாக இருந்தாலும் சட்டத்தை அவர் கையில் எடுத்தது தவறு என்பதற்கு ஏற்ப கண்டித்து விடுகிறார்கள். அதே நேரத்தில் டிராபிக் போலீஸ் இடம் நீங்கள் பண்ணியது தவறு. இந்த விஷயத்துக்கு முத்து உங்க மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தால் உங்க வேலையே போயிருக்கும் என்று வார்னிங் கொடுத்து விடுகிறார். இதனால் அந்த டிராபிக் போலீஸ் முத்து மீது கோபப்பட்டு ஒரு நாள் நிச்சயம் என் கையில் சிக்குவாய் என்று மோதிக்கொள்ளும் அளவிற்கு இரண்டு பேரும் முட்டி கொண்டார்கள்.

ஆனால் இவர் தான் மீனாவின் தங்கை சீதாவிற்கு ஜோடியாக வரப்போகிறார். இந்த வகையில் முத்துக்கு சகலையாக வரப்போகும் இவரை தான் சீதாவும் காதலிக்க போகிறார். அது தெரியாமல் இப்பொழுது இரண்டு பேரும் மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

Trending News