சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

எதிர்நீச்சல் சீரியலில் அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் இருக்கும் தர்ஷன்.. மறுபடியும் கல்யாண ட்ராக்கில் ஜெய்க்கும் மருமகள்கள்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஜாமினில் வர வேண்டுமென்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டும். அத்துடன் தர்ஷன் வாழ்க்கைக்கும் ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காக போஸ்டர் பெரியசாமி சொன்ன ஐடியாவுக்கு குணசேகரன் ஒத்துக் கொண்டார். அதன்படி தர்ஷனடமும் பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டார்கள்.

வீட்டிலேயும் இந்த விஷயத்தை சொல்லும் விதமாக போஸ்டர் பெரியசாமியின் மூத்த மகள் அறிவுகரசி, தர்ஷனுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணப் போகிறோம் என்ற விஷயத்தை விசாலாட்சி மூலம் கூறிவிட்டார். இந்த விஷயத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவு பண்ணிய ஈஸ்வரி, தர்ஷனை சந்தித்து இந்த வயதில் இப்பொழுது கல்யாணம் பண்ணுவது தேவையில்லாத ஒரு விஷயம்.

அதனால் கொஞ்சம் யோசித்து பொறுமையாக முடிவு எடுக்கலாம், உங்க அப்பாவிடம் சொல்லி இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று தடுத்து நிறுத்து என்று சொல்லிப் பார்க்கிறார். ஆனால் தர்ஷன் அதை சொல்வதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை. என்னுடைய அம்மா எப்பொழுதோ இறந்து போய்விட்டார். எங்க அப்பா என்ன சொன்னாலும் அதை தான் நான் கேட்பேன். அதன்படி நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

இதனால் மன வருத்தத்தில் இருக்கும் ஈஸ்வரிக்கு, ஜனனி நந்தினி மற்றும் ரேணுகா சொல்லும் சமாதானம் என்னவென்றால் எப்படி தர்ஷினி கல்யாணத்தை நாம் நிறுத்தினோமோ அதே மாதிரி தர்ஷன் கல்யாணத்தையும் நிறுத்தி விடுவோம். குணசேகரன் எழுந்திருக்காத படி மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று சொல்கிறார்கள். தர்ஷன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வருவதால் தற்போது அப்பா சொன்னபடி கல்யாணம் பண்ணுவதற்கு கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் சம்மதம் தெரிவித்து விட்டார்.

இப்படி ரெண்டும் கிட்ட நிலைமையில் இருக்கும் தர்ஷனுக்கு தற்போது மிகப்பெரிய விஷயமாக இருப்பது சொத்து பணம்தான். இது ரெண்டும் வேண்டுமென்றால் அப்பா சொன்னபடி கல்யாணம் பண்ணி விட்டால் நமக்கு கிடைத்துவிடும் என்ற பேராசையில் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் இருக்காது என்பதற்கு ஏற்ப குணசேகரனுக்கு ஏற்ற பிள்ளையாக தர்ஷன் இருக்கிறார்.

ஆனாலும் குணசேகரன் என்ன பிளான் போட்டாலும் மறுபடியும் மருமகளிடம் குணசேகரன் தோற்றுப் போய் தான் நிற்கப் போகிறார். ஏனென்றால் தர்ஷன் கல்யாணம் குணசேகரன் நினைத்தபடி நடக்கப் போவதில்லை. அத்துடன் கதிரும் ஏதோ ஒரு பிளான் பண்ணி தான் வைத்திருக்கிறார். அந்த வகையில் குணசேகரன் வெளியே வராதபடி கதிர் ஏதாவது காய் நகர்த்தப் போகிறார்.

Trending News