அட விஜய்யை விடுங்க, சங்கீதா விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?. மிரட்டிட்டாங்களே, வெயிட்டு கை தான் போல!

Vijay: சங்கீதா விஜய் சொத்து மதிப்பு வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகு விஜய்க்கு மிகப்பெரிய ரசிகையானார் சங்கீதா.

அதை தொடர்ந்து நேரில் அவரை பார்ப்பதற்கு லண்டனில் இருந்து இந்தியா வந்தார். அதன் பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து அழகான திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

சங்கீதா, விஜய்யை பிரிந்து விட்டார் என ஆதாரம் இல்லாத தகவல்கள் தான் பரவி வருகின்றன. விஜயின் மனைவி என்பதை தாண்டி சங்கீதா ஒரு பெரிய தொழிலதிபரின் மகள்.

சங்கீதாவின் அப்பாவுக்கு பூர்வீகம் இலங்கை. அங்கிருந்து லண்டனுக்கு சென்று சொந்த தொழில் தொடங்கிய இப்போது பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.

சங்கீதா விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவருடைய பெயர் சொர்ணலிங்கம். சங்கீதாவுக்கு உடன் பிறந்த அக்கா ஒருவரும் இருக்கிறார், அவர் பெயர் கீதா.

வெளியான தகவல்களின் அடிப்படையில் சங்கீதாவுக்கு கிட்டத்தட்ட 400 கோடிக்கு சொத்து மதிப்பு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் சங்கீதாவின் பெயரில் சென்னையின் முக்கியமான இடங்களில் கல்யாண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன.

திருவள்ளூர், திருமழிசை, வண்டலூர், திருப்போரூர் போன்ற இடங்களில் ஏக்கர் கணக்கில் சங்கீதா பெயரில் இடங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் நீலாங்கரையில் கோடி கணக்கில் மதிப்புள்ள சொகுசு பங்களாவும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் லண்டனில் அப்பாவின் உதவியுடன் நிறைய பிசினஸ்களில் முதலீடு போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Comment