Gossip: திருமணம் ஆகி குழந்தை குட்டி என இருந்தாலும் நம்பர் நடிகை கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். இதனால் மாமி நடிகை தான் கடுப்பில் இருக்கிறாராம்.
40 வயதை கடந்த பிறகும் மாமி நடிகை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு தான் அவருக்கு மிஸ் ஆகிறது.
அதிலும் சர்ச்சை நடிகர் உடன் நடிக்க வேண்டும் என நடிகைக்கு ரொம்ப ஆசையாம். அவருடைய புது படத்தில் நடிக்கலாம் என தூது விட்டு பார்த்திருக்கிறார்.
ஆனால் நடிகரோ இளம் ஹீரோயின்களுடன் நடிப்பதில் தான் கவனமாக இருக்கிறார். அதனால் நடிகையிடம் இருந்து வந்த அழைப்பை அவர் நிராகரித்திருக்கிறார்.
நம்பர் நடிகைக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது
இதனால் அம்மணி ரொம்பவும் நொந்து போய் இருக்கிறாராம். அதிலும் இந்த சர்ச்சை நடிகர் நம்பர் நடிகையுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
அப்படி இருக்கும்போது நமக்கு மட்டும் ஏன் இப்படி என அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். இப்படியே வயதான ஹீரோக்களுடன் நடித்து வந்தால் சரிப்பட்டு வராது.
நம்மையும் வயதான ரேஞ்சுக்கு மாற்றி விடுவார்கள். அதனால் இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என நடிகை முடிவு செய்து இருக்கிறாராம்.