சந்தியா ராகம் சீரியலில் புவனேஸ்வரின் பிளானை தடுத்து நிறுத்திய மாயா.. ஆத்திரத்தில் ரகுராம், சேர்ந்த ஜோடிகள்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், மகளிர் அணியை கூட்டிட்டு வந்து பஞ்சாயத்தில் பிரச்சினை பண்ணி கதிர் மற்றும் தனம் பிரிய போவதை மாயா தடுத்து விடுவார் என்ற பயத்தினால் மாயாவை அடியாட்களை வைத்து புவனேஸ்வரி கடத்த சொல்லிட்டார். இந்த விஷயம் மாயாவின் மாமனாருக்கு தெரிந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.

அத்துடன் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜானகி, போலீஸ் ஸ்டேஷனில் குருவாக இருக்கும் போலீஸிடம் உதவி கேட்டு எப்படியாவது மாயாவை காப்பாற்றி என்னுடைய மகளின் வாழ்க்கையும் மீட்டெடுக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். அதன்படி போலீஸ் குரு என்பவர் மாயாவின் மாமனாரை கூட்டிட்டு மாயா கடத்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்க்கிறார்கள்.

அங்க மாயாவை கடத்திய பொழுது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கையில் போட்டிருந்த கண்ணாடி வளையலை உடைத்து விட்டு போயிருக்கிறார். இதை பார்த்த போலீஸ் குரு, மாயாவை கண்டுபிடித்து விடலாம் என்று பின் தொடர்ந்து போகிறார்கள். அப்பொழுது ஒரு பாழடைந்த வீட்டு பக்கம் அதே வளையல் உடைந்து போய் இருந்ததை பார்த்ததும் இங்கேதான் மாயா இருப்பார் என்று உள்ளே போகிறார்கள்.

அப்படி போனதும் கட்டி போட்டு இருந்த மாயாவை போலீஸ் காப்பாற்றி விட்டார்கள். அதன்பின் பஞ்சாயத்தில் நடக்கும் விஷயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக மகளிர் காவல் நிலையத்திற்கு அனைவரும் போகிறார்கள். அங்கே மாயா நடந்த விஷயங்களை சொல்லி ரகுராம் மீது கேஸ் கொடுக்கிறார்.

உடனே மாயா மற்றும் அங்குள்ள அதிகாரிகள் அனைவரும் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள். இதற்கு இடையில் பஞ்சாயத்தில் முடிவு பண்ணயபடி கதிர் தனத்தை பிரிப்பதற்கு காசு வெட்டுவதற்கு தயாராகி விட்டார்கள். ஆனால் கதிர் மற்றும் தனத்திற்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் சூழ்நிலை காரணமாக இதற்கு சம்மதம் கொடுத்து விடுகிறார்கள்.

அந்த சமயத்தில் பஞ்சாயத்தில் கோயில் பூசாரி காசு வெட்ட போகிறார். அப்பொழுது மாயா நிறுத்துங்க என்று சொல்லி மகளிர் அணியுடன் வந்து விடுகிறார். அந்த வகையில் இது சட்டப்படி செல்லுபடி ஆகாது. இது நடக்க கூடாது என்று மகளிர் அணி சொல்லி ரகுராம் மீது கேஸ் இருக்கிறது என்பதையும் சொல்லி இதை தடுத்து நிறுத்தி விடுவார்கள்.

தனத்தையும் கதிரையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று புவனேஸ்வரி போட்ட பிளான் சுக்கு நூறாக உடைக்கும் விதமாக மாயா தடுத்து நிறுத்திவிட்டார். ஆனாலும் ஏற்கனவே மாயா மீது கோபத்துடன் இருக்கும் ரகுராம் இந்த விஷயத்தினால் மறுபடியும் ஆத்திரமடை அளவிற்கு ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டிவிட்டார்.

இருந்தாலும் மாயாவை பொறுத்தவரை தனமும் இந்த குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார். அந்த வகையில் மாயா செஞ்ச காரியத்தால் தற்போது தனத்தின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு விட்டது. இதனை அடுத்து கார்த்திக் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறான் என்ற விஷயத்தையும் மாயா கண்டுபிடித்து ரகுராமுக்கு காட்டிவிடுவார்.

Leave a Comment