வீரா சீரியலில் மாறனை புருஷனாக ஏற்றுக் கொண்ட வீரா.. கண்மணி மூலம் வரும் பிரச்சினை, வெளிவந்த உண்மை

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், கண்மணி போலீஸிடம் யார் என்னுடைய கையெழுத்தை போட்டு மாறன் மீது கொடுத்த கேசுக்கு ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க சொல்லி இருந்தார். அத்துடன் கண்டுபிடித்த நிமிஷமே அந்த ஆளை போட்டு தள்ளிடுங்க என கண்மணி கூறியிருந்தார். உடனே போலீஸ், அடியாட்களை வைத்து கோர்ட்டில் யார் கையெழுத்து போட்டு இருக்கிறார் என்ற விஷயத்தை கேட்க சொன்னார்.

அதன்படி அந்த ஆட்கள் கோர்ட்டுக்கு சென்று அங்கே இருக்கும் நபருக்கு லஞ்சம் கொடுத்து கையெழுத்துப் போட்ட வீடியோவை பார்த்து விடுகிறார்கள். அத்துடன் அதை போட்டோ எடுத்து போலீஸிடம் தகவலை கொடுக்கிறார். உடனே போலீஸ் அந்த நபரை போட்டு தள்ளிடுங்க என சொல்லிவிடுகிறார். உடனே வீராவை ஃபாலோ பண்ணி இவர்கள் போகிறார்கள்.

இதற்கிடையில் வீராவின் கடைசி தங்கை மாறனுக்கு போன் பண்ணி உங்களுக்கும் வீரா அக்காவுக்கும் எதாவது பிரச்சனையா?. வீரா அக்காவின் முகம் வாடி போய் இருந்தது. அத்துடன் அண்ணனின் ஆட்டோவை எடுத்துட்டு போயிட்டாங்க என்று சொல்கிறார். உடனே மாறன், வீராவை தேடி போகிறார்.

அந்த சமயத்தில் வீராவை ஃபாலோ பண்ணிய நபர்கள் வீராவின் ஆட்டோவை மடக்கி வீராவை கொலை பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். இவர்களிடம் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொண்ட வீராவை சரியான நேரத்தில் மாறன் வந்து காப்பாற்றி விட்டார். கண்மணி தன்னுடைய தங்கை என்று தெரிவதற்கு முன் போலீஸிடம் சொன்ன ஒரு விஷயத்திற்காக வீராவின் உயிருக்கே ஆபத்தாகி விட்டது.

ஆனாலும் மாறன் இருக்கும் வரை வீராவுக்கு எதுவும் ஆகாது என்பதற்கு ஏற்ப சரியான நேரத்தில் மாறன் வந்து காப்பாற்றி விட்டார். இதையெல்லாம் தொடர்ந்து வீராவுக்கு, மாறன் மீது எந்த தவறும் இல்லை என்பதில் ஒரு தெளிவு வந்து விட்டது. இதனை சரியாக கேட்டு தெரிந்து கொள்ளும் விதமாக வள்ளி அத்தை இடம் நடந்த விபத்தை பற்றி வீரா வற்புறுத்தி கேட்கிறார்.

அப்பொழுது சமாளிக்க முடியாத வள்ளி அத்தை நடந்த விபத்து மாறன் பண்ணியது அல்ல. ராகவன் தான் குடித்துவிட்டு பண்ணியிருக்கிறான் என்ற விஷயத்தை போட்டு உடைக்கிறார். வள்ளியத்தை மூலம் வெளிவந்த உண்மையை கேட்டு அதிர்ச்சியான வீரா, மாறனை இந்த கேசில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று போராட போகிறார்.

அத்துடன் கண்மணி இடம் இனி நான் மாறன் உடைய பொண்டாட்டி. அதனால் மாறனை இந்த கேசிலிருந்து காப்பாற்றும் முயற்சியிலும், குடும்பத்தை உன்னிடம் இருந்து பாதுகாக்க விஷயத்திலும் நான் வெற்றி பெறுவேன் என்று சவால் விடும் அளவிற்கு மோத ஆரம்பித்து விட்டார்.

Leave a Comment