மகாநதி சீரியலில் கட்டுக்கடங்காத காதலை வைத்து அவஸ்தைப்படும் விஜய்.. தனியாக தவிக்கும் காவிரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கூட இருக்கும்போது அவங்களோட அருமை தெரியாது விட்டு விலகுனதுக்கு பிறகு தான் மகத்துவம் புரியும் என்று சொல்வார்கள். அது போல தான் தற்போது விஜய், காவேரி பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்.

விளையாட்டாக செய்த காரியம் வினையாக போய்விட்டது என்பதற்கு ஏற்ப ஒரு வருட ஒப்பந்த கல்யாணம் முடிவடையும் தருணத்தில் காவிரி பரிதவிப்பை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டு வந்த விஜய் தற்போது மொத்தமாக பீல் பண்ணும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது.

நம்ம காவேரி தானே நம்மள விட்டு எங்க போய் விடுவார் என்ற அலட்சியத்தினால் தற்போது விஜய், காவேரியை விட்டு பிரிந்து விட்டார். காவிரிக்கும் விஜய் என்றால் ரொம்பவே பிடிக்கும் ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக என்ன பண்ணுவது என்று தெரியாமல் தனியாக தத்தளிக்கிறார்.

இப்படி இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் மாற்றி பீல் பண்ணும் இந்த தருணத்தில் நிரந்தரமாக இவர்கள் பிரியும் அளவிற்கு காவேரி குடும்பம் இந்த வீட்டை விட்டு போகப் போகிறார்கள். ஆனால் இதை தடுப்பதற்கு முயற்சி எடுக்கும் விதமாக விஜய் காவிரி வீட்டிற்கு சென்று பேச போகிறார்.

ஆனால் அங்கு இருப்பவர்கள் விஜய் மற்றும் காவிரியை சந்திக்க விடாமலும் பேச விடாமலும் தடுத்து விடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராகினி, வெண்ணிலா மூலம் காவேரி மறுபடியும் இந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு பிளான் பண்ண போகிறார்.

Leave a Comment