Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், கதிர் போட்ட பிளான் படி அண்ணன் ஜெயிலிலிருந்து வெளியே வர முடியாது. அதே நேரத்தில் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொடுத்து விட்டார். இனி நாம் தான் ஒட்டுமொத்த சொத்துக்கும் ராஜாங்கம், நாம் வைக்கிற தான் சட்டம். வீட்டையே ஆளப்போகும் அடுத்த குணசேகரன் நான் தான் என்ற தெனாவட்டில் கதிர் காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்.
ஆனால் கதிர் பிளான் அனைத்தையும் புரிந்து கொண்ட ஜனனி, கதிருக்கு கடிவாளம் போட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் கதிரின் ஆட்டத்தை மொத்தமாக அடக்க வேண்டும் என்றால் குணசேகரன் வெளியே வரவேண்டும். குணசேகரனை கூட எளிதாக சமாளித்து விடலாம், இந்த கதிரின் சூட்சமம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதால் ஜனனி, குணசேகரன் ஜாமினில் வரட்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
அந்த வகையில் ஜனனி எது பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரியும், குணசேகரன் ஜாமினில் வருவதற்கு எந்தவித ஆட்சப்பனையும் இல்லை என்று கூறிவிட்டார். இதையெல்லாம் எதிர்பார்க்காத கதிர் இனி சோலி முடிஞ்சிருச்சு என்பதற்கு ஏற்ப முகத்தில் பயம் தெரிய ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இன்னொரு பக்கம் குணசேகரன் வெளியே வரக்கூடாது அதற்கு நாம் என்ன பண்ணனுமோ அதை யாருக்கும் தெரியாமல் சைலண்டாக இருந்து பண்ண வேண்டும் என்று குறுக்கு புத்தியை ஃபாலோ பண்ண ஆரம்பிக்க போகிறார்.
அதற்குள் சொத்துக்கள் எல்லாத்தையும் ஆட்டைய போட வேண்டும் என்று கதிர் தயாராகி விட்டார். இன்னொரு பக்கம் தர்ஷன் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று போராடும் நான்கு மருமகளுக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் தர்ஷன் காதலித்த விவரம் வெளியே வரப் போகிறது. அதோடு மட்டுமில்லாமல் காதலித்த அந்தப் பெண் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் கல்யாணம் தவிர வேற வழியில்லை என்ற முடிவுக்கு நான்கு மருமகள்களும் வந்து விடுவார்கள்.
அந்த வகையில் தர்ஷனை எப்படியும் அவர்கள் வழியில் சிக்க வைத்து தர்ஷன் காதலித்த பெண்ணோடு சேர்த்து வைக்க முயற்சி எடுப்பார்கள். ஆக மொத்தத்தில் குணசேகரன் ஏற்பாடு பண்ணும் கல்யாணம் நடக்கப் போவதில்லை, அதே நேரத்தில் கதிர் சொத்துக்களை அபகரித்து அதன் மூலம் மற்றவர்களை அடக்க வேண்டும் என்று பிளான் பண்ண விஷயமும் நடக்காது.
இதற்கு இடையில் ஜாமினில் இருந்து வெளியே வரும் குணசேகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயம் காத்துக் கொண்டிருக்கிறது. தன்னை விட கதிரை மூர்க்கத்தனமாக நம்பிய குணசேகருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக போகப் போகிறது. அத்துடன் குணசேகரன் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு கதிர் சம்பவத்தை செய்யப் போவதால் இனி குணசேகரன் மற்றும் கதிர் நேருக்கு நேர் மோத போவது உறுதியாகிவிட்டது.
இதையெல்லாம் மனசில் வைத்து தான் ஜனனி, குணசேகரனை வெளியிலே விடுவதற்கு ஓகே சொல்லிவிட்டார். இனி நடக்கப் போகிற ஒவ்வொரு சம்பவமும் தரமாக இருக்கப் போகிறது