Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் எந்த எல்லைக்கும் போக தயார் என்ற நிலைமையில் ரோகினி செஞ்ச பாவங்களும் பண்ணிய அட்டூழியங்களும் கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது போதும் ரோகினி நீ ஆடிய ஆட்டத்திற்கு உனக்கு தண்டனை கிடைக்கும் விதமாக கர்மா திரும்பி அடிக்க போகிறது என்பதற்கு உதாரணமாக தான் தப்பே பண்ணாமல் மனோஜிடம் கம்பால் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் போதாது இனி தான் உனக்கு பாவ கணக்கு இருக்கிறது என்பதற்கு ஏற்ப ரோகிணி பற்றிய ஒவ்வொரு விஷயங்களும் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. அதில் முதலாவதாக முத்து போனை செருப்பு தைக்கும் இடத்தில் விட்டது வித்யா தான் என்று தாத்தா மூலம் முத்துக்கு தெரிய வந்துவிட்டது. உடனே முத்து அந்த தொலைந்த போனை எடுத்துட்டு வித்யாவின் வீட்டிற்கு போகிறார்.
போனதும் இது என்னது என்று தெரிகிறதா என கேட்கிறார். உடனே அதை நக்கலடிக்கும் விதமாக வித்தியா போன் இது கூட தெரியாதா என்று கேட்கிறார். அதற்கு முத்து போன் தான் ஆனா இது என்னுடைய தொலைந்து போன போன் என்று சொல்லியதும் வித்தியாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. இதன் பிறகும் முத்து சும்மா விட மாட்டார் என்பதற்கு ஏற்ப இந்த போன் உன்னுடைய கைக்கு எப்படி கிடைத்தது.
போனில் இருந்த சத்யாவின் வீடியோ எப்படி சோசியல் மீடியாவுக்கு போனது என்ற விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக வித்யாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். வித்யாவும் ஆரம்பத்தில் பொய் சொல்லி சமாளிக்கலாம் என்று முயற்சி எடுத்து இருந்தாலும் அதை முறியடிக்கும் விதமாக முத்து கேள்வியால் வித்யாவை மடக்கிவிட்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல் முத்து கேட்ட கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாத வித்தியா உண்மையை உளறி விடுகிறார். அதாவது மீனா மீது இருந்த கோபத்தினால் மீனாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவருடைய தம்பியின் வீடியோவை ரோகிணி தான் வெளியே விட்டார் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். இதை தெரிந்ததும் முத்து ஆவேசப்பட்டு குடும்பத்தில் இருப்பவரிடம் ரோகிணி செய்த விஷயத்தை சொல்லப் போகிறார்.
அப்பொழுது ரோகினி நான் ஒன்னும் இல்லாத சொல்லலையே, மீனாவின் தம்பி திருடின வீடியோவை தானே வெளியிட்டேன் என்று தப்பித்துக் கொள்வதற்காக நல்லவர் மாதிரி பேச்சை மாற்றி விடுவார். உடனே முத்து அந்த அளவுக்கு நீங்க நல்லவளாக இருந்தால் உங்களுடைய பார்லர் சொந்தமானது கிடையாது. அதில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தான் என்ற உண்மை பற்றி ஏன் நீங்கள் யாரிடமும் சொல்லவில்லை.
இதுவரை மனோஜிடம் கூட சொல்லாமல் மறைத்ததற்கான காரணம் என்ன என்று முத்து, ரோகினியின் வாயை அடைக்கும் அளவிற்கு சம்பவத்தை செய்யப் போகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாத ரோகினி வழக்கம்போல் திருட்டு முழி முழித்துக் கொண்டு இருக்கப் போகிறார். உடனே மனோஜ் மற்றும் விஜயா என்னது பார்லர் ரோகினி வேலை பார்க்கும் கடையா என்று அதிர்ச்சியில் நிற்கப் போகிறார்கள். இனி ஒவ்வொரு நாளும் ரோகினி கதற சத்தம் தான் கேட்கப் போகிறது என்பதற்கு ஏற்ப முத்து சம்பவம் செய்ய தயாராகி விட்டார்.