விடாமுயற்சி 100 நாள் ஓடினாலும் கூட குறையாத அஜித்தின் கோபம்.. மகிழ்த்திருமேனிக்கு கட்டம் கட்டிய ஏ கே

விடாமுயற்சி படம் பல இன்னல்களைத் தாண்டி ஒரு வழியாக திரைக்கு வர இருக்கிறது. பிப்ரவரி ஆறாம் தேதி உலகமெங்கும் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள். இதுதான் இதற்கு பாதகமாய் அமைந்த ஒரு விஷயம்.

ஆரம்பத்தில் எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையும் ஒரு சேர இணைத்து சூட்டிங் நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதுவும் போக லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது, இதனால் திட்டமிட்டபடி அஜர்பைஜானில் சூட்டிங் நடத்த முடியவில்லை.

விடாமுயற்சி ரிலீசுக்கு முன்பு முக்கியமான இடங்களில் அதாவது மதுரை, கோயம்புத்தூர், திருச்சி , திருநெல்வேலி போன்ற இடத்தில் மட்டும் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் காட்சிகள் ஏற்பாடு செய்ய திட்டம் போட்டு வருகிறார்கள். முந்தைய நாள் இரவு இந்த காட்சி திரையிடுவதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படம் 100 நாட்கள் ஓடி, சூப்பர் ஹிட் ஆனாலும் அஜித் மீண்டும் மகிழ் திருமேனியுடன் ஒரு காலமும் இணைய மாட்டார் என்று தெரிகிறது. படம் சூட்டிங் நடைபெறும் பொழுது பெரிய அளவில் மனக்கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது, இதனால் அஜித் காட்டமாக இருப்பதாகவும், மீண்டும் இந்த கூட்டணி இணையாது என்றும் கூறுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக படத்தில் அஜித் இமேஜை கெடுக்கும் அளவிற்கு ஒரு காட்சி இருக்கிறதாம். படத்திற்கு தேவைப்படுவதால் அஜித்தும் அதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளாராம். ஆனாலும் அவரது ரசிகர்களுக்கு அந்த காட்சி பெரிய நெருடலை ஏற்படுத்துமாம்.

Leave a Comment