Devayani: 90களின் காலகட்டத்தில் டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் தேவயானி. இவருடைய திருமணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
அந்த நேரத்தில் அவருடைய காதல் கணவர் ராஜகுமாரனை வசை பாடாத ஆட்களே இல்லை. ஆனால் தன்னுடைய காதல் திருமணத்தை இன்றளவும் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் இந்த அழகிய தம்பதிகள்.
ராஜகுமாரனுக்கு மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது நீ வருவாய் என. அதன் பின்னர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.
சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடியனாக நடித்தார். ஆனால் இது தேவயானிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை எனவும் பேசப்பட்டது.
தேவயானி மேல மரியாதை கூடிட்டே போகுதே!
இதைத் தொடர்ந்து கடுகு படத்திலும் ராஜகுமாரனுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தாண்டி சமீப காலமாக அவருக்கு நடிக்கும், இயக்கும் வாய்ப்பு எதுவுமே இல்லை என ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
எந்த வாய்ப்பும் இல்லாத போதும் நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு தேவயானி தான் காரணமா என கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு ரொம்பவும் மகிழ்ச்சியுடன் ராஜகுமாரன் ஆம் என பதில் சொல்லி இருக்கிறார். அப்போது தேவயானி பிசியாக இருக்கும் நேரங்களில் நீங்கள் தானே வீட்டு நிர்வாகத்தை பார்க்க வேண்டி வரும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு ராஜகுமாரன் ரொம்பவே புன்னகையுடன் அதுதான் இல்லை என்று சொல்லி இருக்கிறார். தேவயானி அதிகாலையிலேயே எழுந்து விடுவாராம்.
குழந்தைகளுக்கு சமைப்பது, ராஜகுமாரனுக்கு தேவையானதை எல்லாம் சமைத்து வைத்து விடுவது, குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது போன்ற வேலைகள் எல்லாம் தேவயானியே பார்த்து விடுவாராம்.
ஷூட்டிங் அதிகமாக இருக்கும் காலங்களில் வீட்டிற்கு வேலைக்கு வரும் ஆளிடம் ஃபோன் மூலமே என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை சொல்லி விடுவாராம்.
ராஜகுமாரன் கதை எழுதுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறாராம். உங்களுக்கு எப்போ வாய்ப்பு வருதோ அப்போ படம் பண்ணுங்கள் என தேவையான தேவயானி சொல்லி விட்டாராம்.
மேலும் அதற்கு வசதியாக வீட்டிலேயே ஸ்டூடியோ ஒன்றும் கட்டிக் கொடுத்திருக்கிறாராம். ராஜகுமாரன் முழுக்க முழுக்க நேரத்தை அங்கேதான் செலவிடுகிறார்.
வீட்டு வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கும் போது கணவர் உதவி செய்யவில்லை என்றாலே எரிச்சல் வந்துவிடும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் தன்னுடைய காதல் கணவர் பிடித்த வேலையை செய்தால் போதும் என தொழில் மற்றும் குடும்பம் இரண்டுமே சரிவர பராமரித்து வருகிறார் தேவயானி.
சமீபத்தில் இவர் இயக்கிய குறும்படம் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து தன்னுடைய கனவுக்கு நேரம் ஒதுக்குகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.