நீ ஆடுன பரதநாட்டியத்த கூட பொறுத்துக்குவோம்.. ஆனா டைட்டில் வின்னர் ஆகலைன்னு அழுத பாத்தியா, வைரல் மீம்ஸ்

Memes: அப்போதெல்லாம் சீரியல் என்றால் பொடிசு முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு பார்ப்பார்கள். ஆனால் இப்போது வரும் சீரியல்களை அப்படி பார்க்க முடிவதில்லை.

baakiyalakshmi-memes
baakiyalakshmi-memes

பெரிய திரை ரேஞ்சுக்கு ரொமான்ஸ் வில்லத்தனம் என எல்லை மீறி போகிறது. அதிலும் சில சீரியல்கள் எதற்காக வருஷக்கணக்கில் ஓடுகிறது என்றே தெரியவில்லை.

அப்படி ஒரு சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி. வருஷ கணக்கில் கதையே இல்லாமல் ஓடும் இந்த சீரியல் தற்போது பயங்கர ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

அதில் பாக்கியலட்சுமி மகள் இனியா நடன போட்டியில் ஆடிய டான்ஸ் இது என்னடா பரதநாட்டியத்துக்கு வந்த சோதனை என கலாய்க்க வைத்துள்ளது.

அந்த அளவுக்கு வந்துச்சே ஃபீலிங்ஸ் என அவர் போட்ட டப்பாங்குத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இத பார்த்து எங்களுக்கு தான் மா பீலிங்ஸ்.

சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டைரக்டரே என நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். அதேபோல் இனியாவையும் விட்டு வைக்கவில்லை.

நீ ஆடுன பரதநாட்டியத்தை கூட பொறுத்துக்குவோம். ஆனா டைட்டில் வின்னர் ஆகலைன்னு அழுத பாத்தியா அத மன்னிக்கவே மாட்டோம்.

உனக்கு மூணாவது பரிசு கொடுத்த அவன ஜெயில்ல போடணும் என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். அதேபோல் ஐஸ்வர்யா ரஜினி ஒரு முறை பரதநாட்டியம் ஆடியது இப்படித்தான் ட்ரோல் ஆனது.

அந்த வரிசையில் பாக்கியலட்சுமி இனியாவும் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேமஸான இந்த பெண் இப்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

அப்படி இணையத்தை வைரல் ஆக்கிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மீம்ஸ் தொகுப்பு இதோ.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment