Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் போனை திருடியது யார் என்பதை கண்டுபிடிக்கும் விதமாக செருப்பு தைத்த தாத்தாவின் பேரனுக்கு ரோகிணி மற்றும் வித்யாவின் போட்டோவை முத்து அனுப்பி வைத்திருந்தார். அதன்படி தாத்தாவின் பேரன் முத்துவுக்கு போன் பண்ணி கழுத்தில் தாலி இல்லாமல் இருக்கும் பெண் தான் தாத்தா கடையில் போனை விட்டுட்டு போனதாக சொல்கிறார்.
உடனே முத்துக்கு சந்தேகம் உறுதியான நிலையில் நேரடியாக வித்யாவின் வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் இது என்னுடைய தொலைந்து போன போன். ஆனால் இதை நீதான் செருப்பு தைக்கும் இடத்தில் விட்டுட்டு போயிருக்கிறாய், எப்படி உன் கைக்கு கிடைத்தது என்று கேட்கிறார். அதற்கு வித்தியா, ரோகிணியின் தோழி என்பதை நிரூபிக்கும் வகையில் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி முத்துவை ஏமாற்றி விட்டார்.
அதாவது என்னுடைய ஃபோனில் சின்ன பிரச்சனை ஆகிவிட்டது. அதனால் என்னால் புது போன் வாங்க முடியாது என்பதால் பழைய போனை காசு கொடுத்து வாங்கினேன். அப்படித்தான் இந்த போன் என் கையில் கிடைத்தது, ஆனால் இது உங்க போன் தான் என்று எனக்குத் தெரியாது. போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் போட சொல்லி இருந்தாங்க.
அப்படி போட்டுட்டு மறுநாள் எடுத்துட்டு போகும் போது தான் அந்த போன் மிஸ் ஆகிவிட்டது என்று முத்து சந்தேகப்படாத படி ரோகிணி மாதிரி வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி முத்துவை ஏமாற்றி விட்டார். இதனை அடுத்து முத்துவும் எதுவும் கேட்க முடியாத அளவிற்கு இந்த விஷயத்தில் அமைதியாகிவிட்டார். கடைசி வரை ரோகிணியின் உண்மையான ரகசியத்தை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முத்து தோற்றுப் போய்க் கொண்டே வருகிறார்.
இதற்கிடையில் ரவி மற்றும் சுருதியின் ஒரு வருஷ கல்யாணம் நாளை கொண்டாடும் விதமாக பத்திரிக்கை அடித்து குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்துட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த பங்க்ஷனில் கலந்து கொள்வதற்காக ஊரில் இருக்கும் பாட்டியும் வரப்போகிறார். அப்படி வரும் பொழுது ரோகினியின் அப்பா புகைப்படத்தை பார்க்க போகிறார். இவரும் பாட்டி ஊரும் ஒரே ஊர் என்பதால் சின்ன வயசிலிருந்து ரெண்டு பேரும் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு.
அதனால் இந்த போட்டோவை பார்த்ததும் பாட்டி நான் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று சொல்லப் போகிறார். அந்த வகையில் முத்துவுக்கு இன்னும் சந்தேகம் அதிகரிக்க போகிறது. ஆனாலும் ரோகிணி இதை சமாளிக்கும் விதமாக மறுபடியும் பொய் சொல்லி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றி விடுவார். இந்த ரோகிணி எல்லாம் அடங்கவே மாட்டார் என்பதற்கு ஏற்ப பொய் சொல்லி அனைவரையும் ஏமாற்றி பார்ப்பவர்களையும் ஏரிச்சல் படுத்தும் அளவிற்கு தில்லாலங்கடி வேலைகளை ரோகிணி பார்த்து வருகிறார்.