வெள்ளிக்கிழமை, ஜனவரி 31, 2025

சுயநலமாக இருந்த கோபியை புலம்பவிட்ட ராதிகா.. அட்டகாசம் பண்ணிய ஈஸ்வரிக்கு பாக்யா வைக்க போகும் செக்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா வாழ்க்கையில் செஞ்ச ஒரே தவறு கோபியை நம்பி இரண்டாவது கல்யாணம் பண்ணினது தான். ஆனால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தற்போது ராதிகா உணர்ந்து விட்டார்.

ஒருமுறை முட்டாள்தனமாக ஏமாறலாம், தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் ஏமாந்து கொண்டே இருக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்ட ராதிகா சுயநலமாக இருக்கும் கோபி நமக்கு வேண்டாம் என்று முடிவு பண்ணி உங்க பையன நீங்களே வச்சுக்கோக்க, என்ன ஆளை விடுங்க சாமி என்று கையெடுத்து கும்பிட்டு கிளம்பி விட்டார்.

இதை எதிர்பார்க்காத கோபி நம்மிடம் எதுவும் கேட்காமல் ராதிகா எப்படி, இப்படி ஒரு முடிவை எடுக்கலாம் என்று யோசித்து புலம்பி தவிக்கிறார். ஈஸ்வரி இதற்கெல்லாம் அசராமல் பாதியில் வந்தவள் பாதியிலேயே போய்விட்டாள். போனவள் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய், உனக்காக இந்த குடும்பம் இருக்கிறது.

நான் இருக்கிறேன் நீ எதை நினைத்தும் கவலைப்படாதே சந்தோசமாக இரு என்று கோபிக்கு ஆறுதல் சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான பாக்கியா, ராதிகாவின் முடிவு ஒரு வகையில் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மயூ மற்றும் ராதிகாவின் நிலைமையை பார்க்கும் பொழுது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கிறது என்று செல்விடம் புலம்புகிறார்.

இனி யார் புலம்பி என்ன ஆகப்போகிறது என்பதற்கு ஏற்ப கோபியிடமிருந்து நிரந்தரமாக பிரிவதற்கு ராதிகா முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் ராதிகாவை பார்த்து பேச போகும் கோபியிடம் இனி என்னை தேடியும் வராதீங்க. மயுவை பார்த்து பேசவும் முயற்சி எடுக்காதீர்கள். நீங்கள் உங்க குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள் நான் என் மகளை பார்த்துக் கொள்வேன் என்று திரும்பப் போக சொல்லி விட்டார்.

இதனால் கோபி கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் மறுபடியும் முதல் மனைவியாக இருக்கும் முன்னாள் மனைவி பாக்யாவின் வீட்டிற்கு தஞ்சம் அடைந்து விட்டார். இதுதான் சான்ஸ் என்று ஈஸ்வரி, தனியாக இருக்கும் கோபி மற்றும் பாக்யாவை சேர்த்து வைக்கும் வகையில் சில தில்லாலங்கடி வேலைகளை பார்க்கப் போகிறார்.

இதனைப் பார்த்து கடுப்பாக போகும் பாக்கியா, உங்க பிள்ளையை மறுபடியும் ஏன் தலையில் கெட்ட பாக்றீங்களா என்று உஷாராக கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று முடிவெடுக்கப் போகிறார். அப்படி உங்க பிள்ளை கூட தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் தாராளமாக இருந்து கொள்ளுங்கள். நான் இந்த வீட்டை விட்டு போய் விடுகிறேன் என்று ஈஸ்வரிக்கு செக் வைக்க போகிறார்.

Trending News